அந்த குடும்பம் இருக்கும் வரையில் அந்த கட்சி இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி!

0
91

ராஜராஜ சோழன் விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் ஆடிட்டர் குருமூர்த்தியிடம் கேள்வி எழுப்பினர் இதற்கு பதில் அளித்த அவர் 2000 வருடங்களுக்கு முன்பாக சனாதன தர்மம் மட்டுமே இருந்தது. அப்போது வேறு மதங்கள் இல்லை. அதனால் அதற்கு பெயரும் இல்லை என்று குறிப்பிட்டார்.

பெயரே இல்லாத மதமாக இருந்ததால் வெளியில் இருந்தவர்கள் தான் பெயர் வழங்கினார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை ஆனால் இது தொடர்பான பேச்சுக்கள் அனைத்தும் பாஜகவிற்கும் இந்துத்துவா இயக்கங்களுக்கு மட்டுமே உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக உட்கட்சி மோதல் தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் குருமூர்த்தி இடம் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் வழங்கிய அவர் ஆலோசனை கேட்டால்தான் சொல்வேன் என்னிடம் ஆலோசனை கேட்டிருந்தால் அவர்கள் பற்றியும் நான் ஏன் எழுதப் போகிறேன்? ஆலோசனை கேட்டால் தனிப்பட்ட முறையில் சொல்வோம், விமர்சனங்களை துக்ளக்கில் எழுதுவோம். கேட்காமல் யாருக்கும் நான் ஆலோசனை வழங்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு திமுக தொடர்பான கேள்விக்கு பதில் வழங்கிய அவர், திமுக என்பது ஒரு கட்சியே இல்லை. அந்த குடும்பத்தை எடுத்து விட்டால் அதுவும் கட்சி கிடையாது. எப்படி ஜெயலலிதா, எம்ஜிஆர் உள்ளிட்டோர் அதிமுகவின் முதுகெலும்பாக இருந்தார்களோ அதேபோல இந்த குடும்பம் முதுகெலும்பாக இருக்கிறது. இந்தக் குடும்பம் எவ்வளவு நாளைக்கு ஒற்றுமையாக இருக்கிறதோ அவ்வளவு நாளைக்கு திமுக இப்படி இருக்கும் குடும்பம் பிரியாத வரையில் ஒற்றுமை இருக்கும் என்று தெரிவித்தார்.

அதிமுக இணைப்பு விவகாரத்தில் பாஜக இந்த முறை பங்குபெறுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், பாஜக என்ன செய்யும் என என்னால் சொல்ல முடியாது. ஆனால் 2017 ஆம் ஆண்டு என்னிடம் ஆலோசனை கேட்கப்பட்டது ஒற்றுமையாக இருப்பது நல்லது தான் என்று சொன்னேன்.

பாஜகவுக்கு எந்த பங்கும் இல்லை என்று தெரிவித்தார் அதோடு அதிமுகவை பாஜக பிழக்காது அதிமுக பிளவு பட வேண்டும் என்று பாஜக ஒருபோதும் நினைக்காது. இருந்தாலும் பிளவு படத்தான் செய்வோம் என்று நின்றால், நீங்கள் எப்படியாவது ஒன்று சேருங்க என்று பாஜக சொல்லுமா என்று தெரியவில்லை என தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே அதிமுகவின் அடையாளமாக இருந்தால் அதிமுகவின் நிலை என்னவாக இருக்கும் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் வழங்கிய குருமூர்த்தி, அதிமுக சிறிய கட்சியாக இருக்கும் என்று தெரிவித்தார். அதோடு அவர் மேலும் தெரிவித்ததாவது, அதிமுக என்பது திமுகவிற்கு எதிரான கட்சி திமுகவிற்கு எதிரான உணர்வு அந்தக் கட்சியுடைய வாக்கு பலம், அந்த கட்சியின் சமுதாய வீச்சு இவையெல்லாம் பிரியும் போது அதிமுகவிலிருந்து யார் பிரிந்தாலும் அது சின்ன கட்சியாகிவிடும். அனைத்துமே பலவீனமாகத்தான் மாறும் என்று தெரிவித்துள்ளார்.