ஆளுங்கட்சியின் நடவடிக்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்! எதிர்க்கட்சி தலைவர் மீது போடப்பட்ட வழக்கு!

0
80

முன்பொரு காலத்தில் ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சி தனக்கெதிராக என்ன செய்தாலும் உடனடியாக அவதூறு வழக்கை தொடுப்பார் , ஏதாவது ஒரு காரணத்தை தெரிவித்து அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார். இப்படி பலவிதமான கோணங்களில் எதிர்க்கட்சியை தன் கட்டுக்குள் வைத்திருந்தார் ஜெயலலிதா என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒரு கட்டத்திற்கு மேல் சென்னை உயர் நீதிமன்றமே எதிர்க்கட்சி குற்றம் சொல்வதற்கெல்லாம் அவதூறு வழக்கு தொடர்வதா என்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை நோக்கி கேள்விக் கணைகளைத் தொடுத்தது.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக எதிர்க் கட்சி தன்னுடைய பணிகளை சரியாக செய்தால் அது முதலமைச்சருக்கு பொறுக்கவில்லை உடனடியாக ஏதாவது ஒரு புகாரை தெரிவித்து எங்கள் கட்சி மீது நடவடிக்கை மேற்கொள்கிறார், எங்கள் கட்சியை சேர்ந்த முக்கிய நபர்களை கைது செய்கிறார் என்று புலம்பி வந்தது.

ஆனால் தற்சமயம் ஆட்சி அதிகாரத்திலிருக்கும் திமுக முன்பு அதிமுக செய்த அதே வேலையை செய்து வருகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம் திமுக ஆட்சி அதிகாரத்தில் வந்ததிலிருந்து திமுகவில் யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது வழக்குப் போடுவது, அவர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையை வைத்து சோதனை செய்வது, ஏதாவது ஒரு வகையில் அவர்களை மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

அந்தவகையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்து அதனை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் அதிமுகவினர் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுகவினர் பலர் பங்கேற்றார்கள்.

இந்த சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அமைப்பு செயலாளர் செம்மலை, உட்பட 12 பேர் மீது சட்டவிரோதமாக ஒரே இடத்தில் கூடுதல் சாலையை மறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சேலம் டவுன் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அதேபோல விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உட்பட பலர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சண்முகத்தை காவல்துறையினர் கைது செய்யப் போவதாக தகவல் வெளியானது. இதன்காரணமாக திண்டிவனத்திலுள்ள சண்முகம் வீட்டின் முன்பு நேற்று முன்தினம் இரவு அதிமுகவினர் கூடத்தொடங்கினார்கள். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு உண்டானது.

கோயம்புத்தூரில் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறித்து முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் அம்மன் கே அர்ஜுனன், பி ஆர் ஜி அருண்குமார், தாமோதரன் சூலூர் கந்தசாமி, அமுல் கந்தசாமி உள்ளிட்ட சட்டசபை உறுப்பினர்கள் உட்பட 14 பேர் மீது ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.