பன்னீர்செல்வம் உட்பட அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் அதிரடியாக கைது! வேலையை காட்டிய முதலமைச்சர்!

0
73

சமீபத்தில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் விழுப்புரத்தில் ஆரம்பித்து இருந்த ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இது அதிமுகவினரை அதிர்ச்சியடைய செய்தது. இதற்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உட்பட அதிமுகவின் முக்கிய பிரமுகர்களும் அதிமுக தலைமையும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வந்தார்கள்.இந்த சூழ்நிலையில், ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்பான விவகாரத்தில் சென்னை கலைவாணர் அரங்கம் எதிரே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் இறங்கிய அதிமுகவின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் உட்பட பல சட்டசபை உறுப்பினர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் சென்னை கலைவாணர் அரங்கம் எதிரே இருக்கின்ற சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் உட்பட சட்டசபை உறுப்பினர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தார்கள். தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மீதான விவாதம் தற்சமயம் நடந்து வருகிறது. இதில் பல அறிவிப்புகளும் அதன் மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்று வருகின்றது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் சட்ட மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டசபையில் மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் திமுகவை கண்டித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்கள். அதன் பின்னர் கலைவாணர் அரங்கத்தில் எதிரே இருக்கின்ற சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் இறங்கினார்கள்.

இதன் காரணமாக, அங்கே அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் உண்டானது பன்னீர்செல்வம் தலைமையில் சட்டசபை உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதன் காரணமாக, அங்கே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக சட்ட சபை உறுப்பினர்களை கைது செய்தார்கள். அவர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்று இருப்பது அதிமுகவின் தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் திருவல்லிக்கேணி சமூக நலக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அனேகமாக இன்று மாலை வரை அவர்கள் அங்கேயே வைக்கப்பட்டு விட்டு மாலை நேரத்தில் விடுதலை செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.