எதிர்க்கட்சித் தலைவர் ஆளுநரை சந்தித்த ரகசியம் இதுதான்! மத்திய அரசின் உண்மை முகம் தெரிய வந்தது!

0
35

மேயர் நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட தலைவர்களை பொதுமக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் விதத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு முத்தரசன் கோரிக்கை வைத்திருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சேலத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த சமயத்தில் அதிமுக ஆட்சியின் போதே அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதனடிப்படையில் தற்சமயம் சோதனை நடைபெற்று வருகிறது தங்களை தற்காத்துக் கொள்வதற்காகவும், தங்களுடைய சொத்துக்களை பாதுகாப்பதற்காகவும் அதிமுகவின் தலைவர்கள் தற்சமயம் ஆளுநரை சந்தித்து வருகிறார்கள். அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆளுநரை சந்தித்து இருந்தால் பாராட்டுகளை தெரிவித்து இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் பொது பிரச்சனைக்காக ஆளுநரை சந்திக்காத முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தங்களையும், தங்களுடைய கட்சிக்காரர்களையும், தற்காத்துக் கொள்வதற்காகவே ஆளுநரை சந்தித்து இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று தகவல் கிடைத்திருக்கிறது. இதில் மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை பொதுமக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் விதத்தில் சட்டம் கொண்டு வர வேண்டும் என கூறியிருக்கிறார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதோடு சமையல் எரிவாயு விலை உள்ளிட்டவற்றின் உயர்வு காரணமாக, பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விலை ஏறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், கூறியிருக்கிறார். மத்திய அரசின் வரி விதிப்பு தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு அடிப்படை காரணம் என்று மத்திய அரசை குற்றம் சுமத்தி இருக்கிறார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 30ஆம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன சைக்கிள் பேரணி நடத்தப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.