நிர்வாகிகளிடம்! ரகசியத்தை உடைத்த ராமதாஸ்!

0
71

சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியை விட வேறு சிறந்த கூட்டணி பாமகவுக்கு கிடையாது அந்த கட்சியின் நிர்வாகிகள் சிலரிடம் ராமதாசு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சமீபத்தில் பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான, அமித்ஷா சென்னை வந்து சென்றார். கூட்டணி கட்சிகள் என்ற முறையில் தேமுதிக, பாமக, உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளுக்கும் அவரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனாலும் பல காரணங்களை தெரிவித்து பாமக, மற்றும் தேமுதிக, ஆகிய கட்சிகள் அமித்ஷாவை சந்திப்பதை தவிர்த்து விட்டனர். இதன் காரணமாக பாஜக உடனான கூட்டணியை பாமக, மற்றும் தேமுதிக, ஆகிய இரு கட்சிகளும் விரும்பவில்லையோ என்ற சந்தேகம் எழ தொடங்கி இருக்கின்றது.

அதிலும் மிக முக்கியமாக கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக, மற்றும் அதிமுக, கூட்டணியில் முண்டியடித்துக் கொண்டு போய் இணைந்தது பாமகதான். ஆகவே சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக என்ன முடிவு மேற்கொள்ளப் போகின்றது என்று அந்தக் கட்சி தொண்டர்களே காத்திருக்கிறார்கள். தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் கூட்டணியின் மிக முக்கிய தலைவர் சென்னை வந்திருந்தபோது அவரை பாமக சார்பாக யாரும் சந்திக்காத நிலையில், ஒருவேளை கூட்டணியை பாமக விரும்பவில்லையா என்று அந்தக் கட்சி தொண்டர்களே சந்தேகிக்கின்றனர்.

அதேபோல தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கூட்டணி நிலைப்பாட்டிற்கு ஏற்றார்போல அதற்கான வேலைகளை நிர்வாகிகளால் ஆரம்பிக்க முடியும் ஆனால் இப்போது வரை கூட்டணி தொடர்பாக வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை இந்த நிலையில் அண்மையில் கூட்டணி சம்பந்தமாக பாமக மூத்த நிர்வாகிகள் ஜி.கே.மணி, ஏ கே மூர்த்தி ஆகியோரை அழைத்து ராமதாஸ் ஆலோசனை செய்ததாக தெரிவிக்கிறார்கள் அப்போது தமிழ்நாட்டில் பாமக விற்கான கூட்டணியில் பாதிப்புகள் சம்பந்தமாகவே நீண்ட நேரம் பேச்சுக்கள் நடந்ததாக தெரிவிக்கிறார்கள்.

தனியாக போட்டியிடப் போவது இல்லை என்ற முடிவில் ராமதாஸ் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள். திமுகவின் கூட்டணிக்கு போனால் நிச்சயமாக அவர்கள் முதுகில் குத்துவார்கள் என்பதை நிர்வாகிகள் மட்டுமல்ல ராமதாசும் அறிந்து வைத்திருக்கிறார் என்று தெரிவிக்கிறார்கள். அதோடு திமுக, மற்றும் பாமக, கூட்டணி இரு கட்சிகளின் தொண்டர்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. முக்கியமாக பாமக தொண்டர்கள் நிச்சயமாக திமுக கூட்டணியை விரும்ப மாட்டார்கள் என மூத்த நிர்வாகிகள் தெரிவித்ததை ராமதாசும் ஏற்றுக்கொண்டதாக தெரிகின்றது.

அதேநேரம் தமிழ்நாட்டில் வலுவான மூன்றாவது அணிக்கு இப்போது வாய்ப்பு கிடையாது. ஆகவே திமுக, அல்லது அதிமுக, உடன் கூட்டணி வைப்பதை தவிர அந்த கட்சிக்கு வேறு வழி இல்லை. திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் பிரச்சாரம் என்பதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க இயலாது என்ற ரீதியில் ராமதாஸ் பேசியதாக தெரிகின்றது. ஆளும் தரப்பின் கூட்டணியில் பாஜக இருக்கிறது என்ற ஒரு நெருக்கடியை தவிர்த்து அந்த கட்சியுடன் கூட்டணி தொடர்வதில் பாமகவிற்கு எந்த ஒரு சிக்கலும் கிடையாது என்று ராமதாஸ் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதோடு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அதிமுக வெற்றி பெற்றுள்ளதால் சட்டசபை தேர்தலில் அந்த கட்சியை தோல்வியை சந்திக்கும் என்று உறுதியாக கூற இயலாது என்ற காரணத்தால், அதிமுக கூட்டணி தான் இப்போதைக்கு அந்த கட்சிக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என ராமதாஸ் தெரிவித்ததாக தெரிகின்றது. அதன் அடிப்படையில்தான் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் இருக்கும் எனவும் பாமக மூத்த நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள்.