“போச்சே போச்சே” பதறும் ஓபிஎஸ்! முக்கிய புள்ளிக்கு ஸ்கெட்ச் போட்ட திமுக.. மகிழ்ச்சியில் எடப்பாடி!

0
125
AIADMK is out.. The ruling party pulled the main administrator! Don't expect this tv show!!

“போச்சே போச்சே” பதறும் ஓபிஎஸ்! முக்கிய புள்ளிக்கு ஸ்கெட்ச் போட்ட திமுக.. மகிழ்ச்சியில் எடப்பாடி!

அதிமுகவின் ஒற்றை தலைமை என்ற விவகாரம் தொடங்கியது முதல் ஓபிஎஸ்இபிஎஸ் என்ற இரு அணிகளாக பிரிந்து கட்சி நிர்வாகிகள் இடையே அதிருப்தி நிலை ஏற்பட்டு விட்டது.

கட்சி நிர்வாகிகளும் இரு அணிகளாக பிரிந்து தங்களின் ஆதரவை தெரிவித்து வந்தாலும் ஆளும் கட்சி மற்றும் இதர கட்சியினருக்கு இது பெரும் நன்மையாகவே அமைகிறது.

ஏனென்றால் கட்சியில் ஒன்று சேர்ந்து இருக்கும் பொழுது மற்றவர்களால் ஏதும் செய்ய முடியாத நிலையில் தற்போது இரு அணிகளாக பிரிந்த நிலையில் இரண்டு அணியையும் சரமாரியாக தாக்கி வருகின்றனர். அந்த வகையில் தற்சமயத்தில் பலரும் திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்பொழுது கோவை செல்வராஜ் திமுகவில் இணைய  போவதாக பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார்.

இவர் ஓபிஎஸ் பக்கம் ஆதரவளித்து வந்தாலும் இருவருக்கும் இடையே ஏதோ ஒரு மனக்கசப்பு இருந்து வந்துள்ளது. இதனால் சமீப காலமாக கட்சியின் நிகழ்ச்சிகளில் எதிலும் கலந்து கொள்ளாமலே இருந்துள்ளார். அந்த வகையில், இவர் திமுகவில் இணைவது தப்பில்லை என்றவாறு பேட்டி அளித்தார்.

ஓபிஎஸ் இபிஎஸ் என்று இரு அணிகளாக பிரிந்தவுடன் ஓபிஎஸ் அவர்கள் தனது அணியினை பலப்படுத்த சுயநலமாக முடிவுகளை எடுத்து வருவதாகவும், அந்த வகையில் கொங்கு மண்டலத்தில் அவர் சாதியற்ற மற்றவர்களை நிர்வாகிகளாக பொறுப்பேற்க வைப்பதால்தான் இவர் திமுகவில் இணைய உள்ளதாக கூறுகின்றனர்.

அதை சுட்டிக் காட்டி தான் கோவை செல்வராஜ் இருவரும் தங்களின் சுயநலத்திற்காக போட்டியிட்டு கொள்கின்றனர். இவர்களின் சுயநலத்திற்காக பணி செய்ய விருப்பமில்லை, அதற்கு மனசாட்சியும் இடம் தரவில்லை எனவே அதிமுக விட்டு விலகுகிறேன் என தெரிவித்தார்.

ஒரு பக்கம் இவர் ஓபிஎஸ் விட்டு விலகுவது இபிஎஸ் யிற்கு ஆனந்தத்தை தந்தாலும், இருவருக்குமே இது பெரும் இழப்புதான். ஏனென்றால் கோவை செல்வராஜ் ஆரம்ப கட்டத்தில் இருந்து அதிமுகவிற்கு பல விதங்களில் பக்க பலமாக இருந்துள்ள நிலையில் தற்போது கட்சி மாறுவது இவர்களுக்கு வீழ்ச்சியே அளிக்கும்.

இவர் கட்சியை விட்டு திமுகவில் இணையும் பொழுது இவருடைய ஆதரவாளர்களும் திமுகவில் இணைய அதிக வாய்ப்பு உள்ளது. ஒரு பக்கம் ஓபிஎஸ் அணியினருக்கு இவர் அதிமுக விட்டு விலகாமல் பேச்சுவார்த்தை நடத்திருக்கலாம் என கூறி வருகின்றனர். எனவே அதிமுக இரு அணிகளாக பிரிந்தது இதர கட்சிகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. ஒருவர் பின் ஒருவராக அதிமுகவிலிருந்த முக்கிய நிர்வாகிகளை இழந்து அதிமுக ஆல் அவுட் ஆகப் போகிறது என பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.