இது மட்டும் நடந்து விட்டால் அதிமுகவுக்கு அரசியலே இல்லை! அடுத்து சிறை தான் – டெல்லியில் கிடைத்த அலெர்ட்

0
95

இது மட்டும் நடந்து விட்டால் அதிமுகவுக்கு அரசியலே இல்லை! அடுத்து சிறை தான் – டெல்லியில் கிடைத்த அலெர்ட்

அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்படும் தொடர் ரெய்டு என பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்தார்.

இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சிவி சண்முகம் மற்றும் முன்னாள் அமைச்சர் SP வேலுமணி ஆகியோர் உடனிருந்தனர்.

இதனையடுத்து டெல்லியிலிருந்து திரும்பிய அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது டெல்லியில் அரசியல் எதுவும் பேசவில்லை.மக்களின் தேவையான நதி நீர் பிரச்சனை மற்றும் மேலும் சில பிரச்சனைகள் குறித்து மட்டுமே பேசியதாக கூறினார்.

ஆனால் டெல்லி பயணத்தில் அதிகமாக அரசியலே பேசப்பட்டது என தகவல்கள் கசிந்துள்ளளது. அந்த வகையில் அதிமுகவின் தற்போதைய பிரச்சனை மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது என்று கூறுகின்றனர்.

இதில் குறிப்பாக வரவுள்ள 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தற்போதைய ஆளும் கட்சியான திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று விட்டால் அதிமுகவுக்கு அடுத்து அரசியலே இல்லாமல் போய் விடும் என்று அவர் எச்சரித்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத எடப்பாடி தரப்பு அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

மேலும் இந்த தேர்தலில் அதிமுக 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.இதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதை திட்டமிட அறிவுறுத்தியுள்ளார்.ஏற்கனவே தினகரன் மற்றும் சசிகலா தரப்பு அதிமுகவின் வாக்குகளை பிரித்து வருவதை சுட்டிக்காட்டி மேலும் பிரிந்து கிடைக்காமல் இணைந்து செயல்பட அறிவுறுத்தியுள்ளார்.

இனியும் நீங்கள் பிரிந்து செயல்பட்டால் வீழ்ச்சி நிச்சயம் என்று எச்சரிக்கை அளித்துள்ளார். மேலும் பாமக, தேமுதிக மற்றும் புதிய தமிழகம் கட்சி உள்ளிட்டவர்களை அரவணைத்து வலுவான கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

திமுகவை எதிர்கொள்ள கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்ல என்ன செய்யலாம் என்பது குறித்து இப்போதிலிருந்தே திட்டமிடுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.திமுக வெற்றி பெற்றால் அதிமுகவுக்கு அரசியல் இருக்காது என்பது மட்டுமல்ல அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் சிறைக்கும் செல்லலாம் என்று அடுத்த குண்டையும் போட்டுள்ளார்.

அதனால் உங்களுக்குள் அடித்து கொள்ளாமல் ஒன்றிணைந்து திமுகவை தோற்கடிக்க திட்டமிடுங்கள் என மீண்டும் அவர்களுக்கு எச்சரிக்கை அளித்துள்ளார்.