அதிமுக பொதுக்குழு வழக்கு இறுதி விசாரணைக்கு சம்மதம்! ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

0
103
#image_title

அதிமுக பொதுக்குழு வழக்கு இறுதி விசாரணைக்கு சம்மதம்! ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடத்திய பொதுக் குழுவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், கடந்த வாரம் நீதிபதி குமரேஷ் பாபு அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பளித்தார் .

தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் இரட்டை நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் இரண்டு தரப்பு வழக்கறிஞர் களையும் இந்த வழக்கில் இறுதி விசாரணை மேற்கொள்ள சம்மதமா என கேட்டபோது சம்மதம் என கூறியதால் வழக்கினை வரும் ஏப்ரல் மூன்றாம் தேதி ஒத்தி வைப்பதாக கூறினார்.

வரும் ஏப்ரல் மூன்றாம் தேதி இறுதி கட்ட விசாரணை நடைபெற உள்ளதால் பன்னீர் தரப்பில் என்ன மாதிரி தீர்ப்பு வருமோ என எதிர்பார்ப்பில் உள்ளனர், மேலும் அடுத்த வருடம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில் கட்சியை பலப்படுத்த பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என எடப்பாடி தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் கூறினார்.

வரும் ஏப்ரல் மூன்றாம் தேதி நடைபெற உள்ள இறுதி விசாரணையின் போது இரு தரப்பும் இது வரை நடைபெற்ற அனைத்து ஆவணங்களையும் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகள் இந்த உத்தரவால் மீண்டும் அதிமுகவில் லேசான பதற்றம் ஏற்பட்டுள்ளது, ஆனால் எடப்பாடி தரப்பு இந்த வழக்கையும் சேர்த்து ஏற்கனவே பத்து வழக்குகளில் வெற்றி பெற்றதை போல் பதினொன்றாவது வழக்கில் வெற்றி பெறுவோம் என கூறி வருகின்றனர்.