பொங்கல் பரிசு தொகுப்பு கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்! அதிரடியாக பதில் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்!

0
86

தமிழக அரசின் சார்பாக மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்ந்து தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் பொங்கல் தொகுப்புக்கான கரும்பு, வெல்லம், துணிப்பை, உள்ளிட்டவை கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருப்பதாகவும், முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சுமத்தியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்து இருக்கின்ற சூழ்நிலையில், தற்போது அதற்கான பணிகள் நியாயவிலைக் கடைகளின் மூலமாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொங்கல்பரிசு தொகுப்புகள் தரமானதாக இல்லை என்று அதிமுகவினர் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு பொருட்கள் பொதுமக்களுக்கு தரமற்றதாக வழங்கப்பட்டு வருகிறது. அவைகளில் வண்டுகள் உள்ளதாகவும், 21 பொருட்கள் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட சூழ்நிலையில், தற்போது 18 பொருட்கள் மட்டுமே வழங்கப்படுவதாகவும், பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய இரண்டரை டன் வெல்லம் மோசமாக உள்ளது. சேலத்தில் இருக்கின்ற நியாய விலை கடை ஒன்றில் வெள்ளமானது தரமற்றதாக இருப்பதற்கான ஆதாரம் இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

அத்துடன் ஏற்கனவே தெரிவித்தவை போல தரமற்ற வெள்ளம் எந்த கடையில் வழங்கப்பட்டு இருக்கிறது என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அது சேலம் மாவட்டம் ஓமலூரில் இருக்கின்ற 107 ஓமலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செவ்வாய் சந்தை நியாய விலை கடை NSD 002 BNV SB2 கடையில் தரமற்ற வெள்ளத்தை வழங்கி உள்ளார்கள். இதனை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்று ஆளும் கட்சிக்கு பதிலளித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த காணொளி தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.