தேமுதிகவை கழட்டி விட நினைக்கும் அதிமுக என்ன செய்யலாம்! இன்று முக்கிய முடிவு எடுக்கும் விஜயகாந்த்!

0
70

அதிமுக கூட்டணியில் தற்போது இருந்து வரும் தேமுதிக எதிர்வரும் தேர்தலை அதிமுக கூட்டணியில் இருந்து சந்திக்கலாமா, அல்லது தனித்து சந்திக்கலாமா என்பது தொடர்பாக இன்று முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக காத்துக்கொண்டிருக்கிறது ஆனாலும் ஆளும் கட்சியான அதிமுக அதனைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சசிகலாவை ஆதரிக்கும் வகையிலும், எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்யும் வகையிலும் பேசியிருக்கிறார்.

அவருடைய அந்த பேச்சு ஆளும் கட்சியான அதிமுகவிற்கு கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது. பிரேமலதா அவ்வாறு பேசி இருப்பது தொகுதி பேரத்திற்க்காகத்தான் என்று சொல்லப்பட்டு வருகின்றது. ஆனாலும் பாமக மற்றும் பாஜகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசிவரும் ஆளும் கட்சியான அதிமுக தேமுதிக கண்டுகொள்ளாமல் கிடப்பிலேயே போட்டு வைத்திருக்கிறது.

அதிமுக கூட்டணியில் அதிமுக தங்கள் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை எனவும் பிரேமலதா தெரிவித்திருக்கிறார். அதன் காரணமாக தனியாக தேர்தலில் போட்டியிடவும் தயக்கம் கிடையாது என்று உரையாற்றி இருக்கிறார் பிரேமலதா.

இதுபோன்ற சூழ்நிலையில், தேமுதிகவின் முக்கிய ஆலோசனை கூட்டமானது சென்னையில் நடைபெற இருக்கிறது. இதில் அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அதோடு அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் போன்றவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் எதிர்வரும் சட்டசபை தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.