Home Breaking News அதிமுகவினர் புகார்! வாக்குப்பதிவு ‘உடனடியாக  நிறுத்தம்’ ஈரோடு  கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பரபரப்பு!  

அதிமுகவினர் புகார்! வாக்குப்பதிவு ‘உடனடியாக  நிறுத்தம்’ ஈரோடு  கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பரபரப்பு!  

0
அதிமுகவினர் புகார்! வாக்குப்பதிவு ‘உடனடியாக  நிறுத்தம்’ ஈரோடு  கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பரபரப்பு!  
AIADMK complaints! Voting 'immediately stopped' Erode East constituency by-election stirs up!

அதிமுகவினர் புகார்! வாக்குப்பதிவு ‘உடனடியாக  நிறுத்தம்’ ஈரோடு  கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பரபரப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ ஆக  இருந்தவர் திருமகன் ஈ வெரா அவர் கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். அதனால் அங்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதனால் முறையாக அறிவிப்பு வெளியிட்டது.

மேலும் இன்று காலை ஒன்பது மணியளவில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தொடங்கியது.அதனையடுத்து  இன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சுமார் 1௦௦ மதுகடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் அதிமுக  தென்னரசு, காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன்,தேமுதிக ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சியின்  மேனகா உட்பட  77 பேர்  களத்தில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில்  ஈரோடு பிரப் ரோடு  வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு மாறி பதிவாகி வருகின்றது என புகார் எழுந்தது.மேலும் இரட்டை  இலை சின்னத்தில் ஓட்டுப் பதிவு செய்தால் அவை கை சின்னத்தில் லைட் எரிகின்றது என அதிமுகவினர் புகார் தெரிவித்தனர்.

அதனையடுத்து 178  வது வாக்குசாவடியில்  வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அதுபோன்றே வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள 45 வது  வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு உடனடியாக நிறுத்தப்பட்டது.

author avatar
Parthipan K