அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக சுமார் 2000திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு!

0
74

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரின் மீது பொய் வழக்கு போடுவது, லஞ்ச ஒழிப்புத் துறையை வைத்து சோதனை நடத்துவது, உள்ளிட்ட காரியங்களை காழ்ப்புணர்ச்சியுடன் செய்து வருகிறது என்று அதிமுகவினர் தெரிவித்து வருகிறார்கள்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், அதிமுக தோல்வியடைந்திருந்தாலும் கூட முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருக்கும் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடிபழனிசாமியை பார்த்து சற்று அஞ்சி நடுங்கினார் என்றுதான் சொல்ல வேண்டும்

ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற புதிதில் எதிர்க்கட்சித் தலைவரை பார்த்து சற்றே பயந்துதான் போனார் முதலமைச்சர் ஸ்டாலின் என்றால் அது மிகையாகாது.

ஏனெனில் அவர் முதலமைச்சராக இருந்த சமயத்திலேயே எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் தெரிவித்த கருத்து ஒவ்வொன்றுக்கும் ஆணித்தரமான பதில்களை தெரிவித்து வந்தார். அவர் தெரிவிக்கும் பதிலில் இருக்கும் அர்த்தங்களை ஆராய்ந்து பார்ப்பதற்கே அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு தலைசுற்றல் வந்துவிடும். அந்த அளவிற்கு திறமையானவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற மிகப்பெரிய அந்தஸ்தில் இருந்தால் நாம் எவ்வாறு ஆட்சி நடத்துவது? என்பதே ஸ்டாலினின் பயத்திற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

இந்த நிலையில், திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் நேற்று அதிமுகவினர் மாவட்ட தலைநகரங்களில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் சார்பாக அனுமதி வழங்கப்படவில்லை, ஆனாலும் தடையை மீறி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், தென்காசி புதிய பேருந்து நிலையம், தூத்துக்குடி விவிடி சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவினர் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் குதித்தார்கள்.இந்த சூழ்நிலையில், அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடியில் அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு, அமைப்புச் செயலாளர்கள் சின்னதுரை, செல்லப்பாண்டியன், மாநில எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் ஆறுமுகநயினார், உள்ளிட்ட 950 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தென்காசியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா (சட்டசபை உறுப்பினர்) தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் உள்ளிட்ட 700 பேர் மீது தென்காசி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, உள்ளிட்ட மாவட்டங்களில் 2350 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.