தொகுதிப் பங்கீடு! பாஜகவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அதிமுக!

0
70

சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது தொடர்பாக ஆட்சி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாஜக கோரிக்கையை அதிமுக ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்றது இதனை தொடர்ந்து தேர்தலுக்காக பல்வேறு வியூகங்களை செய்துவந்தது ரஜினி தலைமையில் கூட்டணி அதிமுகவுடன் கூட்டணி மூன்றாவது அணி என்று பல முயற்சிகளை செய்து பாஜக செயல்பட தொடங்கியது. ஆனால் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து பின்வாங்கிய காரணத்தால், முதல் வியூகம் செயலற்றுப் போனது. அதேபோல மூன்றாவது அணி அமைப்பதற்கான வலுவான கட்சிகள் தங்கள் அணியில் வந்து இணையும் என்று பாஜக எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த கட்சி தலைமை ஏற்பதற்கு எந்தக் கட்சிகளும் தயாராக இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே பாஜகவிற்கு இருந்த அனைத்து வாய்ப்பு பறிபோய் அதிமுக கூட்டணியில் இணைவது தான் ஒரே வாய்ப்பு என்றாகிப் போனது.

தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால், கூட்டணியை உறுதி செய்ய வேண்டிய நிர்பந்தம் பாரதிய ஜனதா கட்சிக்கு இருந்து வந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தற்சமயம் திமுக கூட்டணி பலமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.ஆனாலும் பாட்டாளி மக்கள் கட்சி தேமுதிக போன்ற கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும், அந்த கூட்டணி ஆனது திமுகவிற்கு நிச்சயமாக ஒரு ஈடான கூட்டணியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எதிர்வரும் தேர்தலை பொறுத்த வரையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது என்பது பாஜகவிற்கு ஒரு இலக்காக இல்லை .சட்டசபைக்கு அந்தக் கட்சியின் சார்பாக கணிசமான உறுப்பினர்களை அனுப்ப வேண்டும் என்பது மட்டுமே பாஜகவின் முயற்சியாக இருந்து வருகிறது.

ஆகவே கன்னியாகுமரியில் பாரதிய ஜனதா கட்சி செல்வாக்குடன் இருந்து விடுவதால் அங்கே ஒரு சில தொகுதிகளை வென்றாக வேண்டும் என்றால் அதிமுக போன்ற கூட்டணி கட்சிகளின் உதவி பாஜகவிற்கு தேவை. ஆகவே கன்னியாகுமரியில் இருக்கின்ற ஆறு தொகுதிகளில் 3 தொகுதியிலேயே பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவிற்கு பாஜக தரப்பு விதித்த நிபந்தனையை அதிமுக ஏற்றுக் கொண்டு இருக்கிறது. இதற்காகவே பாஜக அதிமுக கூட்டணியை உறுதி செய்திருப்பதாக தெரிவிக்கிறார்கள். மற்றபடி மற்ற இடங்களில் அதிமுக ஒதுக்கும் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக்கொள்ளும் ஏனென்றால் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் கன்னியாகுமரியை தாண்டி வெற்றி பெறுவது கடினம் என்பதை உணர்ந்து இருப்பதாக சொல்கிறார்கள்.

ஆகவே தேவையின்றி அதிகமான தொகுதிகளில் வாங்கிக்கொண்டு திமுக கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. அதோடு காங்கிரஸ் கட்சியில் போட்டியிட இருந்த பகுதிகளை குறிவைத்து பாரதிய ஜனதா கட்சி வியூகம் வகுத்து செயல்பட்டு வருவதாக தெரிகிறது. ஆகவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எத்தனை என்பதைப் பொறுத்து தங்களுக்கு தொகுதிகளை ஒதுக்கினால் போதும் என்று பாரதிய ஜனதா கட்சி நினைக்கின்றது இதனை ஏற்றுக்கொண்ட தமிழகத்தின் ஆளும் தரப்பு இப்போதைய சூழ்நிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு 21 தொகுதிகளில் உறுதி செய்து இருப்பதாக தெரிய வருகிறது. விரைவில் பாரதிய ஜனதாக் கட்சி மற்றும் அதிமுக இடையே அதிகார பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தெரிகிறது.

அதன்பின் பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளான பாமக தேமுதிக போன்ற காட்சிகளோடு எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி என்பதை உறுதி செய்யும் அதிமுக என்று எதிர்பார்க்கப்படுகிறது.