ஆளுநரை புகழ்ந்த எடப்பாடி பழனிச்சாமி! வெளுத்து வாங்கிய திமுக எம்பி!

0
88

தமிழக உரிமையை பறிக்கும் ஆளுநரின் செயல்பாட்டை புகழும் எதிர்க்கட்சியினரை என்ன சொல்வது? இதனைத் தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? என்று திமுகவை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக ஆளுநரை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி சண்முகம் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது திமுக அரசின் செயல்பாடுகள் குறித்த புகார் மனுவையும் வழங்கினர்.

இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் ஆளுநர் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. தமிழக ஆளுநரை விமர்சிப்பது வாடிக்கையான ஒன்றுதான் ஆகவே ஆளுநர் தான் திமுகவை தட்டி கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுக்கு திமுகவை சார்ந்த கனிமொழி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

திருச்செந்தூரில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த திமுகவைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக உரிமைகள் ஆளுநரிடம் அடகு வைக்கப்பட்டிருந்ததாக விமர்சனம் செய்திருக்கிறார்.

தமிழக உரிமைகளை பறிக்கும் ஆளுநரின் செயல்பாட்டை அதிமுகவினர் பாராட்டுகிறார்கள். தமிழக உரிமை பறிக்கப்படுவதைத் தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விரும்புகிறாரா? என்று கனிமொழி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

எப்போது பாஜக ஆட்சி மத்தியில் மலர்ந்ததோ அன்று முதல் பாஜகவையும், பாஜக நியமனம் செய்யும் ஆளுநர்களையும் விமர்சனம் செய்வதையே திமுக வாடிக்கையாக கொண்டிருக்கிறது என்பது பொதுவானவர்களின் கருத்தாக இருக்கிறது.

தமிழகத்தில் எந்த பாதகமான செயல்பாடு நடைபெற்றாலும், அதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று ஏதாவது ஒரு விதத்தில் கதையை திரித்து மத்திய அரசின் மீது பழிபடுவதையே திமுக வாடிக்கையாக கொண்டிருக்கிறது என்று பாஜகவை சார்ந்தவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

அதற்கு உதாரணமாக ஜிஎஸ்டியை எடுத்துக் கொள்ளலாம். ஜிஎஸ்டி என்பது மத்திய அரசு விதிக்கும் வரிதான் என்றாலும் அதிலே மாநில அரசின் வரியும் அடங்கும்.

மத்திய அரசு ஜிஎஸ்டியை விரித்தாலும் மத்திய அரசு விதிக்கும் வரியை விட பொதுமக்களிடம் வியாபாரிகள் அதிகளவில் வசூலித்து விடுகிறார்கள்.அதற்கு காரணம் மாநில அரசுதான் என்று மத்திய அரசு மிக கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளது.

இப்படி மத்திய அரசு எது செய்தாலும், அதனை தமிழகத்திற்கு மட்டும் விரோதமாக காட்டி தன்னுடைய செல்வாக்கை அதிகரிக்க முயற்சித்து வருகிறது திமுக என்று பாஜக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.