மீண்டும் முழு ஊரடங்கா? முதல்வர் விளக்கம்!

0
110

தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் 25ம் தேதி தொடங்கிய கொரோனா ஊரடங்கு தற்போது வரை தளர்வுகளுடன் நீடித்து வருகிறது.இந்த நிலையில், தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் படலாம் என்று நேற்றைய தினம் தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து முழு ஊரடங்கு ஏற்படுத்தப்படுமா என்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரியில் நேற்றையதினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,15,386ஆக இருக்கிறது என்று தெரிவித்த முதலமைச்சர், இந்த தொற்றினால் தமிழ்நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,72,415ஆக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.தற்பொபோது சிகிச்சையில் 30,131பேர் இருக்கிறார்கள் என தெரிவித்திருக்கிறார். அதேபோல 12,840 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இன்றுவரையில் 2,02,58000 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறார். நாளொன்றுக்கு பரிசோதனை செய்யக்கூடியவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரம் ஆக இருக்கிறது குணமடைந்து ஒரு சதவீதம் 95.51 இறந்தவர்களின் சதவீதம் 1.40 சதவீதமாகவும் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல தமிழகத்தில் இருக்கின்ற மொத்த பரிசோதனை நிலையங்கள் 260 என்றும் இதில் அரசின் சார்பாக 69 தனியார் சார்பாக 191 என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதுவரையில் மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு வாங்கிய மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 54 லட்சத்து 85 ஆயிரத்து எழுநூற்று 20 தடுப்பூசிகள் என்றும், இதில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 87 ஆயிரத்து 36 என்றும், தற்சமயம் வரையில் கையிருப்பில் இருக்கும் தடுப்பூசியின் எண்ணிக்கை சுமார் 20 லட்சம் என்றும், தெரிவித்திருக்கிறார்.

தற்சமயம் இந்த வைரஸ் தொற்றின் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. ஆனால் அரசு காட்டிய நெறிமுறைகளை பின்பற்றினால் நிச்சயமாக பாதிப்பு குறையும் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.இந்த தொற்றின் வேகம் அதிகரிக்கும் ஆனால் மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு அதன்பிறகு அதற்கு ஏற்றாற்போல நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என தெரிவித்திருக்கிறார் முதல்வர்.