Connect with us

Cinema

பல வருடங்களுக்கு பிறகு அஜித் இரண்டு வேடங்களில்! விடாமுயற்சி திரைப்படம் பற்றி வெளியான தகவல்!!

Published

on

பல வருடங்களுக்கு பிறகு அஜித் இரண்டு வேடங்களில்! விடாமுயற்சி திரைப்படம் பற்றி வெளியான தகவல்!
நடிகர் அஜித் அடுத்து நடிக்கவுள்ள விடாமுயற்சி திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் விடாமுயற்சி திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித் அவர்கள் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் தயாரிக்கின்றார். அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
அண்மையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதையடுத்து இந்த திரைப்படத்தை பற்றி புதிய தகவல் கிடைத்துள்ளது.
விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் அவர்கள் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக படக்குழு இரண்டு கதாநாயகிகளை தேடி வருகின்றனர். மேலும் நடிகர் அஜித் நடிக்கவுள்ள விடாமுயற்சி திரைப்படத்தை மே மாதம் இறுதியில் படப்பிடிப்பை தொடங்கி நவம்பர் மாதத்தின் இறுதிக்குள் விடமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் அவர்கள் கடைசியாக 2010ல் வெளியான அசல் திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதிலும் சிறிது நேரம் மட்டுமே இரட்டை வேடக் காட்சியில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.