அமெரிக்க விமானத்தில் மனித உடல் பாகம்! அதிர்ச்சியில் உறைந்த விமானப்படை!

0
90

தாலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி இருக்கின்றன இதன் காரணமாக, 20 வருடகால போர் முடிவுக்கு வந்து இருப்பதாகவும், பொதுமக்கள் மற்றும் அரசு சொத்துக்கள் எதுவும் கொள்ளை அடிக்க கூடாது என்றும் தாலிபான் தீவிரவாதிகள் தெரிவித்திருக்கிறார்கள். அதோடு ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து மற்ற நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் அமைப்புகள் அல்லது மற்ற பயங்கரவாத அமைப்பை ஊக்குவிக்க மாட்டோம் என்றும், தெரிவித்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் உலக நாடுகள் அமைதியாக இருந்து வருகிறது.

ஆப்கானிஸ்தானின் மற்ற பகுதிகளில் வன்முறை தாக்குதலுடன் நகரங்களை கைப்பற்றிய தாலிபான் பயங்கரவாதிகள் அமெரிக்கப் படைகள் தங்களை எதுவும் செய்யாது என்பதை உறுதி செய்து எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் காபூல் நகரை நான்கு புறத்திலும் இருந்து நுழைந்து ஆட்சியை கைப்பற்றி இருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் இருக்கின்ற மக்கள் இஸ்லாமிய பெண் அடிமை சட்டத்தின் வரைமுறை இனிமேல் தீவிரமாக அமல்படுத்தப்படும் என்று பயப்படப்படுகிறது. ஆளும் பயங்கரவாதிகள் எந்த சமயத்தில் என்ன முடிவெடுத்து அறிவிப்பார்கள் என்ற பயம் இருப்பதாலும் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் போவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள் அந்த நாட்டு மக்கள். காபூலில் இருந்து பெறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், மற்ற நாட்டு ராணுவ மீட்பு விமானங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

அந்த விதத்தில் சென்ற திங்கட்கிழமை அன்று காபூல் நகரில் இருந்து அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான z17 கிலோபல் மாஸ்டர் விமானம் ஒன்று கத்தார் நாட்டிற்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் சுமார் 640 பேர் பயணம் செய்தார்கள் அதோடு விமானம் புறப்பட்ட நேரத்தில் விமான சாக்கடை பகுதியில் அமர்ந்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார்கள்.

இந்த சூழ்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்டு கத்தார் நகரில் தரை இறங்கிய அமெரிக்க விமானத்தின் சக்கர பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.