அதிமுகவின் பொது குழுவிற்கு தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம்! பங்கேற்பாரா பன்னீர்செல்வம்?

0
77

அதிமுகவில் கடந்த ஒரு வாரகாலமாக ஒற்றை தலைமை என்ற விவகாரம் விஸ்வரூபமெடுத்து இருக்கின்ற சூழ்நிலையில், பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இருக்கின்ற ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடப்பதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதேநேரம் இந்த பொதுகுழுவிற்கு பன்னீர்செல்வம் தரப்பு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் காவல்துறையிடம் பொதுகுழுவிற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று பன்னீர்செல்வம் சார்பாக மனு வழங்கப்பட்டது, அதோடு நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த சூழ்நிலையில், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழு உறுப்பினர்களாக சுமார் 2600 பேர் இருக்கிறார்கள். அதில் 2,300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதிலும் குறிப்பாக அதிமுகவில் 65 சட்டசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இரட்டை இலையில் வெற்றி பெற்ற புரட்சி பாரதம் ஜெகன்மூர்த்தி உட்பட 63 சட்டசபை உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவும், மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்ட 2 சட்டசபை உறுப்பினர்கள் மட்டுமே ஓபிஎஸ் தரப்பில் இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. பெரும்பான்மையான நிர்வாகிகள் பழனிச்சாமியின் பக்கம் இருப்பதால் கட்சியில் எடப்பாடி பழனிச்சாமியின் கை தற்போது ஓங்கியிருக்கிறது .

இதற்கிடையில் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று தெரிவித்து நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பல விஷயங்களை தெரிவித்துள்ளது.

அதாவது சற்றேறக்குறைய 3 மணி நேரம் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. ஒரு கட்டத்தில் தீர்ப்பு இன்று வருவதற்கான வாய்ப்பில்லை என்று அனைவரும் கருதிய நிலையில், இன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது. இந்த நிலையில், நேற்று சென்னை முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

அதோடு எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும், அவரவர் வாதங்களை எடுத்து வைக்கத் தொடங்கினர்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட உயர்நீதிமன்றம் ஒரு அதிரடியான தீர்ப்பை வழங்கியது.

இதற்கு நடுவில் சென்னையில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பன்னீர்செல்வம் அவருடைய இல்லத்தில் அதிமுக தொண்டர்களை சந்தித்தார். அவருடைய ஆதரவாளர்கள் சிலர் சென்னை மெரினாவிலுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கூடினர்.

ஆகவே பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது குறித்து வைத்திலிங்கத்திடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர் நாளைய பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பீர்களா? என்ற கேள்விக்கு ஏன் புறக்கணிக்க வேண்டும்? நாங்கள் பங்கேற்பதாக முடிவு செய்து விட்டோம் என்று தெரிவித்தார்.

ஆனால் பன்னீர்செல்வம் பொதுக்குழுவில் பங்கேற்றுகொள்வாரா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று பதிலளித்தார்.

இந்த நிலையில்தான் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஒரு அதிரடியான தீர்ப்பை வழங்கியது அதாவது இன்றையதினம் நடைபெறவிருக்கும் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு எந்தவிதமான தடையுமில்லை பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறலாம் என்று தெரிவித்தது.

இந்த உத்தரவு வந்த உடனேயே தமிழகம் முழுவதிலுமிருந்து எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிய தொடங்கினர்.

அதாவது கட்சி எடப்பாடி பழனிச்சாமி வசம் தான் இருக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பமாக இருந்து வருகிறது. அதன் காரணமாக, சமூக வலைத்தளங்களில் கூட அவருக்கு வெகுவான ஆதரவு பெருகி வருகிறது.

நீதிமன்றம் பொதுகுழுவிற்கு தடைவிதிக்க மறுத்து விட்ட,நிலையில் பன்னீர்செல்வம் இந்த பொதுக்குழுவில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஒருபுறம் வைத்திலிங்கம் நாங்கள் நிச்சயமாக பொதுக்குழுவில் பங்கேற்போம் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் பன்னீர்செல்வம் அது தொடர்பாக இதுவரையில் எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஆனால் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட 23 தீர்மானங்களுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் ஒப்புதல் வழங்கிவிட்டார். அதோடு அவர் தெரிவித்திருப்பதாவது இனிமேல் புதிதாக எந்த ஊரு வாக்கியத்தையும் இந்த தீர்மானத்தில் இணைக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தமிழக மக்களிடையே பன்னீர்செல்வம் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பாரா? அல்லது பங்கேற்க மாட்டார் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.