1000 ரூபாய் கொடுக்க வக்கில்லாத திமுக அரசு! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேச்சு!

0
59

அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கிய பேட்டியில் தெரிவித்திருப்பதாவது,

ஒவ்வொரு கட்சிகளுக்கும் எதிப்பார்ப்பிருக்கும் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் அளவுக்கு எங்களுடைய கட்சியின் நலனையும், கட்சியினரின் நலனையும், மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அவசியம்.

இதன் காரணமாக, தான் அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இயலாத சூழ்நிலையில், எங்களுடைய நிலைமையை நாங்கள் எடுத்துக் கூறினோம் என்று தெரிவித்திருக்கிறார்.

அதிகப்படியான இடங்களை உங்களுக்கு வழங்க முடியாத சூழ்நிலையில் இருக்கின்றோம் என கூறியிருக்கிறோம். இதனை தொடர்ந்து அவர்கள் ஒரு முடிவை மேற்கொண்டார்கள். இது அவர்கள் கட்சி எடுத்த முடிவு இது தொடர்பாக நான் கருத்து கூற விரும்பவில்லை.

நாங்கள் தனித்தன்மையுடன் பல தேர்தல்களை சந்தித்திருக்கிறோம். அதே போல இந்த தேர்தலிலும் எங்களுக்கிருக்கும் தனித்தன்மை அடையாளத்துடன் மாபெரும் வெற்றியை நாங்கள் கைப்பற்றுவோம் என தெரிவித்திருக்கிறார்.

தேர்தல் என்ற வரலாற்றை உற்று நோக்கும்போது 1977 மற்றும் 2016 உள்ளிட்ட தேர்தல்களில் அதிமுக தனியாகவே களம் கண்டது, அதிமுக என்பது ஒரு மாபெரும் இயக்கம் ஆலமரம் போன்றது. ஆலமரத்தின் கீழே நின்று நிழல் பெறுபவர்கள்தான் அதிகம் என தெரிவித்திருக்கிறார்.

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த கடந்த 8 மாத காலத்தில் அராஜகம், கட்டப்பஞ்சாயத்து, அடாவடி, சட்டசபை உறுப்பினர்களே சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வது உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

பொங்கல் பரிசாக 1000 ரூபாய் கொடுக்க முடியாத அரசாக திமுக அரசுவுள்ளது வெள்ள நிவாரணம் வழங்கவில்லை அனைத்து விதத்திலும் திமுக அரசு தோல்வியடைந்தது, தற்சமயம் பொதுமக்கள் படும் துன்பங்கள் துயரங்கள் மற்றும் அவல நிலையை எடுத்துச் சொல்வோம் எங்களுடைய சாதனைகளை எடுத்துக்கூறி மகத்தான வெற்றியை பெறுவோம் என்று அவர் கூறியிருக்கிறார்.