கடைசி நேர சஸ்பென்ஸ்! அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு

0
105

கடைசி நேர சஸ்பென்ஸ்! அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு

காலியாகும் இடங்களுக்கு ஜூன் 10 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் அதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 6 இடங்களில் திமுகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு 2 இடங்களும் உறுதியாகியுள்ளது.இந்நிலையில் திமுக கூட்டணியில் 1 இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.அதே நேரத்தில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கபட்டனர்.

ஆனால் அதிமுகக்கு கிடைத்துள்ள 2 இடங்களுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நடந்து வந்தது.இதற்கு மாஜி அமைச்சர்கள் பலரும் தங்களுக்கு வாய்ப்பு கேட்டது,OPS மற்றும் EPS ஆதரவாளர்கள் என தனித்தனியாக வாய்ப்பு கேட்டது என பல காரணங்கள் கூறப்பட்டது.

இந்நிலையில் அனைத்து குழப்பங்களும் நீங்கி ஒரு முடிவுக்கு வந்து அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.அதன் அடிப்படையில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 10-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது சம்பந்தமாக 19.5.2022 அன்று தலைமை கழகத்தில் நடைபெற்ற கழக மூத்த நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளின்படி கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலனை செய்து எடுத்த முடிவின்படி அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் பலரும் போட்டியிட்ட நிலையில் நேற்று இவர்கள் தான் என உத்தேசமாக இருவர் பெயர் செய்திகளில் வெளியானது.ஆனால் இன்று அனைத்து சஸ்பென்ஸ்களும் நீங்கி அதிகாரப் பூர்வமாக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது அக்கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.