எதிர்க்கட்சித் துணைத் தலைவரானார் ஓபிஎஸ்!

0
87

எதிர்வரும் 21ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற இருக்கின்ற நிலையில், அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் இன்றைய தினம் அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் பொருளாளர், செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றிய சூழலில் தற்போது துணை தலைவர் பதவி ஓபிஎஸ் வசம் சென்று இருக்கிறது. இந்தநிலையில் 2-வது இடத்தை ஏற்பதற்கு ஓபிஎஸ் தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது .அதோடு தொடர்ச்சியாக ஓபிஎஸ் இபிஎஸ் இடையே அதிகார மோதல் இருந்து வந்ததன் காரணமாக, துணை தலைவர் பதவியை ஓபிஎஸ் தான் ஏற்க வேண்டும் இன்று எடப்பாடி பழனிச்சாமி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்காக பன்னீர் செல்வத்துடன் அவர் சமாதான பேச்சுக்களை முன்னெடுப்பதாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், இன்று எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதேபோல முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி துணை கொறடாவாக, அரக்கோணம் சட்டசபை உறுப்பினர் ரவி பொருளாளராக, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செயலாளராக, முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் துணைச் செயலாளராக ஆலங்குளம் தொகுதி சட்டசபை உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இன்றைய தினம் நடைபெற்ற சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.