ஒரே ஒரு கோரிக்கையால் திமுக எம்.பிக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அதிமுகவின் ரவீந்திரநாத்

0
74

ஒரே ஒரு கோரிக்கையால் திமுக எம்.பிக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அதிமுகவின் ரவீந்திரநாத்

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்ததற்கு அ.தி.மு.க தரப்பு ஆதரவு தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பேசிய ரவீந்திரநாத் குமார் கூறியதாவது.

1984-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாநிலங்களவையில் பேசியபோது, “ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணைக்கபட வேண்டும். ஏன் அது இன்னமும் தாமதம் ஆகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இன்று நம் பாரத பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஜெயலலிதாவின் அந்த கோரிக்கையை தற்போது நிறைவேற்றியுள்ளனர். அதற்காக எங்களின் முழுமையான நன்றியை அ.தி.மு.க. சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் இந்த மசோதா மூலமாக ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு சம உரிமை கிடைக்கும். சுதந்திர கதவை திறந்து விட்டீர்கள். அவர்கள் இந்திய மண்ணில் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

சில அரசியல் ஆதாயத்திற்காக 1974-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு கச்சத்தீவை தமிழகத்தில் இருந்து பிரித்து இலங்கைக்கு கொடுத்துவிட்டது. அவர்கள் அரசியல் லாபத்திற்காக அங்கே ஜம்மு-காஷ்மீரின் உரிமையை இந்தியாவில் இருந்து பிரித்தது போல, இங்கு தமிழ்நாட்டிலிருந்து பிரித்து விட்டார்கள்.

தமிழ்நாட்டின் உரிமையான கட்சத்தீவை மீண்டும் தமிழ்நாட்டிற்கு பெற்றுத்தர வேண்டும் என்று உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறேன். நமது பிரதமரின் புதிய இந்தியாவில், இந்த ஜம்மு-காஷ்மீரின் மசோதா ஒரு மைல் கல்லாக அமையும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இது இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய முயற்சித்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.பிக்களுக்கு ரவீந்தரநாத்தின் இந்த பேச்சு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த காலங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் தமிழக நலனுக்கு எதிராக செயல்பட்டதை தகுந்த நேரத்தில் சுட்டி காட்டி அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் அதிமுகவின் ரவீந்தரநாத் குமார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K