நாங்கள் ஜால்ரா போட்டதால்தான் 11 மருத்துவ கல்லூரிகள் கிடைத்தது; ஸ்டாலினை சுவிட்ச் ஆஃப் செய்த அமைச்சர்!

0
79

நாங்கள் ஜால்ரா போட்டதால்தான் 11 மருத்துவ கல்லூரிகள் கிடைத்தது; ஸ்டாலினை சுவிட்ச் ஆஃப் செய்த அமைச்சர்!

ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் சம்பந்தமான பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திமுகவை திரும்பி பேச முடியாத அளவிற்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ளார்.

பொதுக்கூட்டர்தில் அமைச்சர் பேசியதாவது;
பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு சட்டசபையில் அமைச்சரவை ஒப்புதலுடன் சட்டம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நிதிநிலை அறிக்கையை, பாமகவின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் ஜிகே வாசன் ஆகியோர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சங்கங்கள் வரவேற்றுள்ளன.

ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக அரசுக்கு அரசுக்கு அதிக கடன்சுமை இருப்பதாகவும், பட்ஜெட்டில் உருப்படியாக எதுவுமே இல்லை என்பது போல குறையை மட்டுமே கூறி வருகிறார். என்னமோ கருணாநிதி ஆட்சியில் சிறப்பான பட்ஜெட் போட்டதுபோல் பேசுகின்றார். சட்டப் பேரவையில் சிறுபான்மையினருக்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்போம் என்று தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தெரிவித்துள்ளனர். பட்ஜெட்டிலும் சிறுபான்மையின மக்களுக்கு பல திட்டங்கள் அறிவித்துள்ளதாக கூறினார்.

மேலும், அதிமுக அரசு மத்திய அரசுடன் கூட்டணி வைத்துள்ளதால் இஸ்லாமியர்களுக்கு எதிரானது போல் தொடர்ந்து பேசி வருகிறது. மத்திய அரசுக்கு அதிமுக ஜால்ரா போடுவதாக ஸ்டாலின் பேசுகிறார். ஆமாம், நாங்கள் ஜால்ரா போடுவதால்தான் தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகள் கிடைத்துள்ளது என்று ஆவேசமாக பேசினார். திமுக கட்சியினர் போராடுவதற்கு வேறு எந்த காரணமும் இல்லாததால் இஸ்லாமிய மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாகவும், திமுகவின் நாடகத்தை இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். இந்த பேச்சு திமுகவினருக்கு சாட்டையடி பதிலாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Jayachandiran