அதிமுக தலைவிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்! அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்!

0
74

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 67 இடங்களில் மட்டுமே வெற்றி அடைந்தது .அந்த கட்சி இடங்களில் தோல்வி அடைந்து விட்டது. அந்த கட்சி தென் மாவட்டங்களில் ஏற்பட்ட தோல்வியும், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட தோல்வியும், முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கிறார்கள். அந்த சமயத்தில் மிக அதிக சட்டசபை உறுப்பினர்கள் ஆதரவு இருந்ததால் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இருந்தாலும் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பேசிக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. அதன் பின்னர் சசிகலா உரையாடியது ஆடியோ வெளியான பின்னர் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் ஒன்றினைந்து நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், நெல்லை வண்ணாரப்பேட்டை சந்திப்பு பகுதியில் அதிமுக தலைமைக்கு எதிராக மாணவர் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். இந்த சுவரொட்டியில் அதிமுகவில் கட்சி செயல்பாடுகளில் ஜெயலலிதா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு பன்னீர்செல்வம் அவர்களிடம் கலந்தாலோசிக்காமல் எந்த விதமான முடிவுகளையும் எடுக்காமல் இருந்ததால்தான் அதிமுக தோல்வியை சந்தித்திருக்கிறது. இனியும் இவ்வாறு ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அதிமுக தலைமைக்கழகம் முற்றுகை இடப்படும் என்று சுவரொட்டிகள் ஒட்டி இருப்பது அதிமுகவினரிடையே பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.