7 மாவட்டங்களிலிருந்து ஒட்டு மொத்தமாக திமுகவில் இணையும் அதிமுகவினர்! கடும் அதிருப்தியில் தலைமை

0
83
Edappadi Palanisamy with O Panneerselvam-Latest Political News in Tamil
Edappadi Palanisamy with O Panneerselvam-Latest Political News in Tamil

7 மாவட்டங்களிலிருந்து ஒட்டு மொத்தமாக திமுகவில் இணையும் அதிமுகவினர்! கடும் அதிருப்தியில் தலைமை

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் உண்டாகி திமுக தலைமையிலான அரசு அமைந்தவுடன் திமுகவில் பல அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் இணைந்து வருகிறார்கள். மக்கள் நீதி மையம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் மற்றும் அதிமுகவை சேர்ந்த முன்னாள் சட்ட சபை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட பலரும் திமுகவில் இணைந்தார்.

இந்த சூழ்நிலையில் அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் பலரும் தற்போதைய முதலமைச்சர் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். சென்னையில் இருக்கின்ற அண்ணா அறிவாலயத்தில் வாரம் ஒருமுறை நடைபெறும் மாற்று கட்சியினர் இணைப்பு விழாவில் நேரில் பங்கேற்று இணைந்து கொள்வார்கள்.

அந்த விதத்தில் இன்று காலை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கோயம்புத்தூர் உட்பட 7 மாவட்டங்களை சேர்ந்த 300 க்கும் அதிகமான மாற்றுக் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். இவர்களில் ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த திமுகவின் முன்னாள் அமைச்சர் நடராஜன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் வாசு உள்ளிட்டோர் தங்களுடைய ஆதரவாளர்களுடன் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

அந்த மாவட்டத்தை மட்டுமல்லாமல் கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மற்றும் நெல்லை உட்பட 7 மாவட்டங்களை சேர்ந்த அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டார்கள். சுமார் 300 க்கும் அதிகமான மாற்றுக் கட்சியை சார்ந்தவர்கள் ஒட்டுமொத்தமாக திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் அதிமுக ஏற்கனவே சசிகலாவின் பிரச்சனை காரணமாக தடுமாறிக் கொண்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் சீட்டுக்கட்டு செல்வதைப்போல அதிமுக நிர்வாகிகள் பலர் அந்த கட்சியில் இருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள். இதனால் அந்த கட்சியின் தலைமை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.

ஆனாலும் எத்தனை பேர் கட்சியை விட்டு போனாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்கள் பின்னால் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று தன்னைத் தானே ஆறுதல் படுத்திக் கொண்டு வருகிறது அந்த கட்சியின் தலைமை.

சசிகலா ஒருபுறம் அதிமுகவின் நிர்வாகிகளிடம் உரையாடிக் கொண்டிருக்கும் போதே மறுபுறம் டிடிவி தினகரன் தன்னுடைய அரசியல் சித்து வேலைகளை தொடங்கி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அதிமுக தலைமை கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறது.

இந்த நிலையில்தான் தற்போது அதிமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் திமுகவில் தங்களை இணைத்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் அந்த கட்சி என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றது.