வசமாக சிக்கிய உதயநிதி ஸ்டாலின்! சாட்டையை சுழற்றிய அதிமுக!

0
66

திமுகவின் இளைஞரணிசெயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் தொடங்கியதிலிருந்தே தமிழகம் முழுவதிலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அவ்வாறு அவர் பிரச்சாரம் செய்யும்போதெல்லாம் ஆளுங்கட்சியை மிகத்தீவிரமாக விமர்சனம் செய்தார்.அதோடு காவல்துறை உயரதிகாரிகளையும் மிரட்டும்.தோணியில் பேசினார் இதனால் சர்ச்சை வெடித்தது.

இந்த நிலையில், நேற்று சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வாக்களிக்க வந்த ஸ்டாலின் முதலில் தன்னுடைய குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்குச் சென்று அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு, அதன் பிறகு கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை செலுத்தினார்.இதற்கிடையில் உதயநிதி ஸ்டாலின் வாக்களத்த சமயத்தில் வெள்ளை சட்டையில் வந்திருந்தார். அதில் உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தேர்தல் நடக்கும் சமயத்தில் வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் அப்பால் மட்டுமே சின்னத்தை காட்டவும்,.ஓட்டு கேட்கவும் முடியும்.ஆகவே உதயநிதி தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டிருக்கிறார் என்று அதிமுகவை சார்ந்த பாபு முருகவேல் உதயநிதி ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை ஏற்றுக்கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக உதயநிதி ஸ்டாலினுக்கு சுமார் இரண்டு ஆண்டுகாலம் தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.