உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம்! மறைமுகமாக எதிர்க்கட்சித் தலைவரை தாக்கிய ஓபிஎஸ்!

0
77

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது அதிமுக எதிர்க்கட்சி வரிசைக்கு சென்றுவிட்டது.

ஆனால் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று மறுபடியும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று அதிமுக தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதற்காகவே தமிழகத்தில் பல சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது அப்போதைய அதிமுக அரசு அதாவது தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் இட ஒதிக்கீடு மற்றும் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு, போன்ற சட்டங்களை நிறைவேற்றும் பொதுமக்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் பாராட்டு பெற்றது அப்போதைய தமிழக அரசு.

ஆனால் அப்போதைய தமிழக அரசு என்ன திட்டங்களை கொண்டு வந்தாலும் அதனை தொடர்ந்து குறை சொல்வதையே வேலையாக வைத்திருந்தார் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது திமுகவின் தோல்விக்கு காரணம் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வழங்கியது தான் என்ற ஒரு கூற்று இருந்தாலும் தற்சமயம் அதிமுகவில் இருக்கக்கூடிய இரண்டு தலைமைகளுக்கு இடையில் பனிப்போர் நடைபெற்று வருவதை தற்போது நடைபெற்று இருக்கும் ஒரு நிகழ்வு சுட்டிக்காட்டியிருக்கிறது.

அதாவது 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்குவதற்க்காக தமிழகத்தில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.இந்த சூழ்நிலையில், அதிமுகவினரை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே இதுவரையில் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இதற்கு நடுவில் பன்னீர்செல்வம் எங்கே என்று அதிமுகவினருக்குள் கேள்வி எழ தொடங்கியது.

இந்தக் கேள்விகளுடன் மட்டுமல்லாமல் ஒற்றை தலைமை என்பதற்கான அறிகுறியாகவே எடப்பாடி மட்டும் பிரச்சாரத்திற்கு வருகை தருகிறார் சட்டசபையில் திமுகவை பாராட்டி பேசிய காரணத்தால், ஓபிஎஸ் அவர்களை பிரசாரத்திற்கு வரவேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து விட்டார் என்பது போன்ற யூகங்களும் பரவத் தொடங்கினர்.

இந்த சூழ்நிலையில், சென்ற வாரம் உள்ளாட்சித் தேர்தல் களத்தில் தனியாக பிரச்சாரத்தை ஆரம்பித்தார் ஓபிஎஸ். அதுவும் குறிப்பாக அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி விழுப்புரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பன்னீர்செல்வம் பேசியது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுகவை சார்ந்தவர்களை போல அதிமுகவினர் கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடுவதில்லை, ஊரார் சொத்துக்களை அடித்து உலையில் போடுவது கிடையாது திமுகவினரை விட பொது மக்களிடம் எப்போதும் அதிமுகவினருக்கு தான் நற்பெயர் இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார்.

அதே போல தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது நூற்றுக்கணக்கான ரவுடிகளை கைது செய்து இருக்கின்றோம் என்ற பெயரில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் உண்மையிலேயே சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் தற்போது மோசமாகவே உள்ளது. இந்த சூழ்நிலையில், அதிமுகவுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என குறிப்பிட்டிருக்கிறார் ஓபிஎஸ்.

கடந்த கால ஆட்சியில் நாம் நல்ல விதமாக செயல்பட்டு வந்தாலும் கடந்த சட்டசபை தேர்தலில் வகுத்த தவறான வியூயூகங்கள் காரணமாக, ஒரு சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் நாம் ஆட்சியை இழக்க நேரிட்டது என குறிப்பிட்டிருக்கிறார் ஓபிஎஸ்.

சென்ற சட்டசபை தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதில் இருந்தே கிட்டத்தட்ட தேர்தல் பணிகளையும், தேர்தல் வியூகங்களையும், அவரே வகித்து வந்தார் என்பது அதிமுகவினருக்கு நன்றாக தெரியும். இந்த சூழ்நிலையில், கடந்த சட்டசபை தேர்தலில் தவறான வியலாகத்தால் தான் தோற்றோம் என்பது எடப்பாடி பழனிச்சாமியை நோக்கி நேரடியாக பன்னீர்செல்வம் வைக்கும் குற்றச்சாட்டு என அதிமுகவினரே தெரிவிக்கிறார்கள்.

சென்ற சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்து நள்ளிரவு வரையில் அதிமுகவினரும் ஆலோசனை செய்தார். அந்த சமயத்தில் ஓபிஎஸ் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அதிமுகவுடன் ஒன்றிணைத்து ஒருங்கிணைந்த அதிமுக என தேர்தலை சந்தித்தால் திமுகவை எளிதாக வெற்றி கொள்ளலாம் என குறிப்பிட்டு இருந்தார்.

சசிகலா, டிடிவி தினகரன், உள்ளிட்டோர் மறுபடியும் கட்சிக்குள் வராவிட்டால் தேனி மாவட்டத்திலேயே நான் வெற்றி பெறுவது சிரமம் என்று அமித்ஷாவிடம் வெளிப்படையாகவே பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இதை முற்றிலுமாக மறுத்து விட்டு இரட்டை இலைக்கு தான் செல்வாக்கே ஒழிய வேறு யாருக்கும் செல்வாக்கு கிடையாது என இப்போது இருக்கும் நிலையிலேயே அதிமுக வெற்றி பெற இயலும் என்று தவறான வியூகத்தை வகுத்தார் என்று சொல்லப்படுகிறது.

திமுக தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு அந்த கட்சிக்கு ஆதரவு கிடைக்கவில்லை, ஆனாலும் அதிமுக வலிமையான எதிர்க்கட்சியாக மாறி உள்ளது. அம்மா இருக்கும் போதே தேர்தல் வியூகங்கள் வகுத்துக் கொடுத்தவர் ஓ பன்னீர்செல்வம் அவருடைய பேச்சைக் கேட்டு தேர்தலுக்கு முன்பாகவே அதிமுகவில் ஒற்றுமை ஏற்படுத்தி இருந்தால் நாம் தோல்வியை சந்தித்திருக்க மாட்டோம் என சொல்கிறார்கள் அதிமுகவினர்.