சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தனி கூட்டு குடிநீர் திட்டம் பற்றி அதிமுக திமுக காரசார விவாதம் !!

0
134
#image_title

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தனி கூட்டு குடிநீர் திட்டம் பற்றி அதிமுக திமுக காரசார விவாதம் !!

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் சேலம் மாநகராட்சி சிறப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது, இங்கு ஒவ்வொரு மாநகராட்சி தேர்தலில் அதிமுக திமுக என மாறி மாறி கைப்பற்றி உள்ளன.

கடந்த வருடம் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்று மேயர் பதவியில் திமுகவை சேர்ந்த ராமச்சந்திரன், துணை மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாரதா தேவியும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

ஒவ்வொரு மாத கடைசியில் மாநகராட்சி கூட்டம் மேயர் தலைமையில் நடைபெறுவது வழக்கம், அதன்படி இன்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக திமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய திமுக சூரமங்கலம் மண்டல குழு தலைவர் கலையமுதன் மாநகராட்சி அதிகாரிகள் ஆளும் கட்சியினர் நாம் சொல்வதை கேட்காமல், அவர்களாகவே முடிவு செய்து கொள்வதாகவும் இதனால் மக்கள் நல பணிகள் பாதிக்கப்படுகிறது என கூறினார்.

மேலும் பேசிய அவர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானம் பேருந்துகள் பயன்பாட்டுக்கு தான் தயார் செய்யப்பட்டது ஆனால் இங்குள்ள அதிகாரிகள் அதில் தனியார் மற்றும் அரசு கலை பொழுதுபோக்கு நிகழ்சிகளை நடத்துவதால் யாருக்கு என்ன லாபம் என கூறியதும் மேயர் குறுக்கிட்டு அதிகாரிகள் இனி தவறு செய்யாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் சேலம் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் தனி கூட்டு குடிநீர் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என கூறியதும் அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர், பின்னர் மாநகராட்சி எதிர்கட்சி யாதவ மூர்த்தி முதலில் அதிமுக ஆட்சியில் தான் தனி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது,அதன்பின் திமுக ஆட்சியில் குறைவான நிதி ஒதுக்கப்பட்டது, பின்பு மீண்டும் அதிமுக ஆட்சியில் அதிகப்படியான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது எனவும் திமுகவினர் கூறுவது போல அவர்கள் ஆட்சியில் இந்த திட்டம் கொண்டுவரப்படவில்லை என கூறினார்.