தொகுதிகள் குறைந்ததால் போனஸ் கேட்ட தேமுதிக! என்ன செய்யப்போகிறது அதிமுக!

0
81

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து அதிமுக அதனுடைய கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்கவேண்டும் என்ற தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகிறது. முதல்கட்டமாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு அந்த கூட்டணியில் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையை தொடங்கியது. இன்று அல்லது நாளைக்கு தொகுதிப் பங்கீட்டில் கடைசி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலை இருந்து வருகிறது.

அதேபோல அதிமுக கூட்டணியில் இருந்துவரும் தேமுதிகவிற்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்ற விவகாரம் தொடர்ச்சியாக இழுபறி நிலையிலேயே இருந்து வருகின்றது. தேமுதிக தரப்பில் அதிமுகவிடம் 20 முதல் 23 தொகுதிகள் கேட்கப்பட்டு இருப்பதாகவும், ஆனால் அதிமுக 12 தொகுதிகள் முதல் 14 தொகுதிகளில் தான் ஒதுக்க முடியும் என்று தெரிவித்து இருப்பதாக தெரிகிறது.

இதையெல்லாம் யோசித்துப் பார்த்த தேமுதிக தலைமை எங்களுக்கு தொகுதிகள் குறைக்கப்படும் என்றால் எங்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதிமுக சார்பாக தேர்தல் முடிந்த பின்னர் அதனை முடிவெடுத்துக் கொள்ளலாம் தற்சமயம் தொகுதி பங்கீட்டை முடித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் தேமுதிக தற்சமயம் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று தெரிவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மறுபடியும் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி தொகுதி பங்கீடு போன்றவை எந்தவித சிக்கலும் இல்லாமல் நல்லபடியாக முடிவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.