உறுதியான கூட்டணி! அதிர்ச்சியில் எதிர்க்கட்சி மகிழ்ச்சியில் எடப்பாடியார்!

0
70

தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்தே அதிமுக மற்றும் தேமுதிக இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்திருக்கிறது. அதிமுக மற்றும் தேமுதிக இடையே இதுவரையில் நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எதிலுமே நல்ல முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஒருபுறம் அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே மறுபுறம் தேமுதிக திமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. ஆனால் நாங்கள் அதிமுகவுடன் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நேற்றைய தினம் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாஜக ஆகிய கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது என்று தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகு தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் எதற்கும் பிடி கொடுக்காத தேமுதிகவை முன்னாள் அமைச்சர் ஒருவர் மூலமாக அதிமுக சமாதானம் செய்து இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் முனுசாமி தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளர் சுதீஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில்தான் அதிமுக மற்றும் தேமுதிக இடையே நாளை மறுதினம் தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி உடன்பாடு போன்றவை கையெழுத்தாக இருக்கிறது என்ற தகவலும் கிடைத்திருக்கிறது.

இதன் மூலமாக எப்படியாவது கூட்டணிக்குள் தேமுதிகவை கொண்டுவந்துவிட வேண்டும் என்று அதிமுக செய்த தீவிர முயற்சிக்கு பலன் கிடைத்திருப்பதாகவும், அதேபோல தேமுதிகவை தன் பக்கம் இழுத்து விடலாம் என்று திமுக போட்ட கணக்குகள் அனைத்தும் செயலிழந்து போய் விட்டதாகவும், ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.