உதயநிதி ஸ்டாலினின் வரம்புமீறி பேச்சு! கடிவாளம் போட்ட அதிமுக!

0
59

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக தரப்பில் டிஜிபியிடம் புகார் மனு அளிக்கப்பட்டு இருக்கின்றது.

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல், என்ற தலைப்பிலே திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சுற்றுப்பயணம் செய்து வருகின்றார். அந்த விதத்தில் சென்ற இரு தினங்களாக கடலூர் மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு சில பகுதிகளில், பொதுமக்கள், மற்றும் விவசாயிகள் ஐ, சந்தித்து பேசி வருகிறார். அவர் பேசும்போது அதிமுக அரசை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருப்பதோடு விரைவில் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்து வருகின்றார்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எதிராக ஆளும் தரப்பு சார்பாக டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டு இருக்கின்றது. அதிமுகவின் சட்டப் பிரிவு இணைச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான பாபு முருகவேல் நேற்று அளித்த புகாரில் தெரிவித்திருப்பதாவது, உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொது இடங்களில் விவரிக்க இயலாத வார்த்தைகளால், அவருடைய எல்லையை மீறி கடுமையான சொற்களை பயன்படுத்தி தமிழக முதல்வரையும் , அதிமுக அரசையும், மிரட்டும் வகையில் பேசி இருக்கின்றார் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

அதிமுகவின் அரசை காலணியால் அடித்து விரட்ட வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கின்றார். இது முதலமைச்சரை தனிப்பட்டமுறையில் இழிவு செய்யும் செயலாகும். பொதுமக்கள் மத்தியில் வெறுப்புணர்வை தூண்டிவிட்டு, பொதுமக்களின் ஒழுக்கத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் இருக்கின்றது. என தன்னுடைய அந்த புகார் மனுவில் தெரிவித்திருக்கின்றார் பாபு முருகவேல்.

குத்தாலம் பகுதியில் உதயநிதியை கைது செய்த பின்னர் தொண்டர்களிடம் உரையாற்றிய அவர், சட்டம் ஒழுங்கு காவல் இயக்குனருக்கு சவால் விடும் வகையில், காவல் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படுவதை தடுக்கும் விதமாக, இன்னும் ஆறு மாதங்கள் தான் இருக்கின்றது அடுத்ததாக நாங்கள் தான் ஆட்சிக்கு வரப் போகிறோம் என்று தெரிவித்து காவல் அதிகாரிகளின் பெயரை சொல்லியே கூட மிரட்டும் தோணியில் அவர் பேசி இருக்கின்றார்.

காவல் அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட விடாமல் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், பேசி வரும் உதயநிதி ஸ்டாலின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.