வாயைக்கொடுத்து வம்பில் மாட்டிய பிரபலம்!

0
78

திமுகவைச் சார்ந்த ஆ. ராசா மீது அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப் பட்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் திமுகவின் 2ஜி ஊழல் குறித்து பேசினார் அப்போது அவர் தெரிவித்ததாவது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கின்றது திமுக விரைவில் இந்த வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் சிக்குவார் என்று தெரிவித்திருந்தார் அதோடு மெகா ஊழலை செய்துவிட்டு புத்தர் மற்றும் அரிச்சந்திரனை போல பேசுகின்றார் ஸ்டாலின் என்று விமர்சனம் செய்திருந்தார்.

இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுகவை சேர்ந்த ராசா முதல்வர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது 2ஜி விவகாரம் தொடர்பாக விவாதிக்க தயாரா என்று கேள்வி எழுப்பியதுடன் மூன்று நாள் கழித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் நான் சவால்விட்டு மூன்று தினங்கள் ஆகிவிட்டது இதுவரை முதல்வரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை உங்கள் பதவிக்கு இது அழகா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். உங்காத்தா கொள்ளையடித்து சிறைக்கு சென்றவர் என்று ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாக பேசி இருந்தார்.

இந்நிலையில் முதல்வரை அவதூறாக பேசியதாக அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு சார்பாக காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கின்றது.