உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! உறைந்து போன முதல்வர்!

0
71

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிகழ்வில் விதிமுறை மீறப்பட்ட வழக்கு சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெற்றுப் பரவலை கட்டுக்குள் கொண்டுவர தமிழகம் முழுக்க சென்ற மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு போடப்பட்டு இருக்கின்றது தொற்று குறைய தொடங்கியதை முன்னிட்டு மாதாமாதம் படிப்படியான தளர்வுகளை அறிவித்து வருகின்றது அரசு. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மேலே பொது இடங்களில் ஒன்று கூட கூடாது பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கூடாது என்ற விதிமுறை இருந்து வருகின்றது. அதோடு முககவசம் அணிவது தனிமனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கின்றது.

இதற்கிடையே, சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி திமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் அதிமுக அமைச்சர்கள், கட்சியின் உயர்மட்ட தலைவர்கள், எம்எல்ஏக்கள், போன்றவர்கள் பங்கேற்றார்கள்0 அலுவலகம் முன்பு ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஒன்றுகூடி எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவொற்றியூரை சேர்ந்த வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணியன் வழக்கு கொடுத்திருக்கின்றார். முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியின்போது வைரஸ் தடுப்பு விதிகளை பின்பற்றாத சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கானது நீதிபதிகள் சத்தியநாராயணா, ஹேமலதா அமர்வு முன்பாக நேற்றைய தினம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் குறிப்பிட்டு இருக்கின்ற நாளில் அனைத்து விதிகளும் பின்பற்ற பட்டதாகவும், இந்த மனுவிற்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்.

மனுதாரர் தாக்கல் செய்த முதல்வர் வேட்பாளர் நிகழ்ச்சிக்கான புகைப்படங்களை அவரிடம் காண்பித்த நீதிபதிகள், நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் முககவசம் அணிந்து இருந்தாலும்கூட தனிமனித இடைவேளையை பின்பற்றாமல் இருந்திருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இந்த மனு குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், சுகாதாரத்துறை செயலாளர், மாநகராட்சி சுகாதார அதிகாரி, அதோடு பேரிடர் மேலாண்மை மையத் தலைவர், உள்ளிட்டோர் வரும் ஜனவரி மாதம் 6ஆம் தேதிக்குள் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.