பொள்ளாச்சி விவகாரம்! சிபிஐ அதிரடி நடவடிக்கையின் காரணம் என்ன தெரியுமா?

0
99

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே இருக்கின்ற இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இது தொடர்பாக தொடர்ச்சியான நிகழ்வுகளும் நடந்து வருகிறது.

அக்டோபர் மாதம் 7ஆம் தேதி அதிமுக அதிக முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டு ஜனவரி மாதம் 7 ஆம் தேதியோடு மூன்று மாதங்கள் முடிந்திருக்கின்றன. ஆனாலும் பாஜக இன்னமும்கூட அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை அங்கீகரிக்கவோ, அல்லது ஆதரிக்கவும் இல்லை. அதற்கு மாறாக தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தான் அந்த கட்சியின் தலைவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள்.

இந்த விவகாரத்திற்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்தில், டிசம்பர் மாதம் 29ஆம் தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற அதிமுகவின் பிரச்சார பொதுக் கூட்டத்தில் எடப்பாடியையும் பன்னீர்செல்வத்தையும் வைத்துக்கொண்டே உரையாற்றிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி .முனுசாமி எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் அவரை ஏற்றுக் கொள்பவர்கள் உடன் தான் எங்களுடைய கூட்டணி என்று பாஜகவிற்கு பதில் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஒரு இடத்தில் கூட மோடி என்றும் மத்திய அரசு என்றும் பாஜக கூட்டணி தொடர்பாக தன்னுடைய பேச்சுகளில் குறிப்பிடாமல் மிக கவனமாக தவிர்த்து வருகின்றார்.

ஜனவரி மாதம் நான்காம் தேதி திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே பி.எச் பாண்டியன் சிலை திறப்பு விழாவிற்காக ஒரு வேனில் வந்த முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர், அந்த விழா முடிந்த பிறகு அம்பாசமுத்திரத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சட்டமன்ற உறுப்பினர் முருகையா பாண்டியன் சந்தித்திருக்கிறார்கள். அப்பொழுது அங்கு அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன், அமைச்சர் கடம்பூர் ராஜு, உதயகுமார், தளவாய் சுந்தரம், போன்றோர் இருந்த போதும் பாஜகவுடன் கூட்டணி தேவையில்லை இதை அவர்களிடம் தெரிவித்து விடுங்கள் என்று நிர்வாகிகள் ஒரே குரலாக முதல்வர், மற்றும் துணை முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், அதிமுகவின் பொதுக்குழுவில் கேபி முனுசாமி ஆரம்பித்து வைத்த பாதையிலே, பாஜகவிற்கு எதிர்ப்பு அதிகரித்து இருக்கின்ற நிலையில் தான். இவ்வளவு நாட்களாக பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்த சிபிஐ, இப்பொழுது அதிமுகவின் மாணவரணி நகர செயலாளர் அருளானந்தம் உள்பட 3 பேரை கைது செய்து இருக்கிறது பெண்களுக்கு பாதுகாப்பான அரசு ஜெயலலிதா அரசு எனவும் பெண்கள் ஓட்டை குறிவைத்து எடப்பாடி முழுவீச்சில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில், அதுவும் எடப்பாடி ஈரோட்டில் பிரச்சாரம் செய்து வந்த நிலையிலே, பொள்ளாச்சியில் அதிமுகவின் நகர செயலாளர் கைது செய்திருக்கின்றது சிபிஐ. அவரை கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறது அதிமுக. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், எதிர்க்கட்சிகள் பலமுறை வலியுறுத்தியும், பல்வேறு ஊடகங்கள் ,மற்றும் பத்திரிகைகள் ,இந்த விவகாரம் தொடர்பாக அம்பலப்படுத்தும் திமுகவின் மகளிர் அணிச் செயலாளர் பொள்ளாச்சியில் சென்று தடைகளை மீறி இந்த விவகாரத்தில் அனைவரையும், கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தும் சிபிஐ செவிசாய்க்கவில்லை.

இந்த நிலையில்தான், கனிமொழி இந்த கைது தொடர்பாக பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட இருக்கிறார்கள் என்பதை திமுக தொடர்ச்சியாக தெரிவித்து வந்திருக்கிறது. திமுகவின் கூற்று உண்மை என்பதை இன்று அதிமுக மாணவர் பிரிவின் பொள்ளாச்சி நகர செயலாளரின் மேலும் இரு நபர்களையும் சிபிஐ இந்த வழக்கில் கைது செய்திருக்கிறது. எடப்பாடி அரசிடம் இந்த வழக்கு விசாரணை நடந்து இருந்தால், அந்த கைது கள் நடைபெற்று இருக்குமா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் இந்த கைது நடவடிக்கையை அதிமுகவிற்கு எதிராக ஆயுதமாக தேர்தல் பிரச்சாரத்தில், கொங்கு பகுதியில் திமுக பயன்படுத்துவதற்கு முயற்சி செய்து வருகிறது என்று சொல்லப்படுகிறது.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சிபிஐ மிக தாமதமாக நடவடிக்கை எடுத்து இருந்தாலும் இந்த செயல்பாட்டிற்கு பின்புலத்தில் அரசியல் இருக்கின்றது என்று அதிமுக நினைக்கின்றது எதிர் கட்சி நிர்வாகிகள் சிலரிடம் விசாரணை செய்தபோது பாஜகவுடன் கூட்டணி விஷயத்தில் அதிமுக வேறு மாதிரியான ஒரு சில நிலைப்பாடுகளை எடுத்து இருக்கின்ற காரணத்தால் முதல் கட்டமாக பொள்ளாச்சி விவகாரத்தில் சிபிஐ செயல்பட்டு இருக்கின்றது அதிமுகவின் இதுபோன்ற பாஜக விற்கு எதிரான செயல்பாடுகள் தொடருமானால் அடுத்த கட்டமாக அமைச்சர்கள் மீது கை வைப்பதற்கு முடிவு செய்திருக்கிறது முதல் கட்டமாக அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்ப முடிவு செய்து இருக்கின்றதாம் பொங்கலுக்கு முன்பாகவோ அல்லது அதற்குப் பின்போ விஜயபாஸ்கருக்கு இந்த விவகாரத்தில் சம்மன் அனுப்பப்படும் இது தொடர்பாக இடம் இப்பொழுது ஆலோசனை செய்து வருகின்றார் என்று தெரிவிக்கிறார்கள்.

எல்லாமே டெலிட் பண்ணுவது சரியா தேர்தல் சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற காரணத்தால்தான் அதிமுக அரசின் மீதான பல புகார்கள் மற்றும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பொருத்தி வந்தது பிஜேபி இப்பொழுது அமித்ஷா அதற்கான பச்சைக்கொடி காட்டி விட்டதாகவே தெரிகிறது இனி அதிமுக பாஜக இடையே பரபரப்பு சம்பவங்கள் நடக்கலாம் என பாஜக வட்டாரத்திலும் தெரிவிக்கிறார்கள்.