அதிமுக பாம்கோ தலைவர் சஸ்பெண்ட்!! கூட்டுறவு இணை பதிவாளர் அதிரடி உத்தரவு!!

0
130
#image_title

அதிமுக பாம்கோ தலைவர் சஸ்பெண்ட்!! கூட்டுறவு இணை பதிவாளர் அதிரடி உத்தரவு!!

சிவகங்கை மாவட்ட மொத்த விற்பனை பண்டக சாலைக்கு (பாம்கோ)நிதியிழப்பு ஏற்படுத்தியதாக, அதன் தலைவர் ஏ.வி.,நாகராஜனை (அ.தி.மு.க.,) அப்பதவியில் இருந்து நீக்கி, கூட்டுறவு இணை பதிவாளர் ஜினு உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்ட மொத்த விற்பனை பண்டக சாலை நிர்வாகத்தின் கீழ் 140 ரேஷன் கடை, மருந்தகம், காய்கறி விற்பனை நிலையம், சுயசேவை பிரிவுகள் செயல்படுகின்றன.

கொரோனா காலத்தில் ரேஷனுக்கு மளிகை பொருட்கள் பாம்கோ நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டது. இதில் பல லட்ச ரூபாய் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூட்டுறவு இணை பதிவாளர் ஜினுவிற்கு புகார் சென்றது.இது குறித்து விசாரிக்க கூட்டுறவு சிவகங்கை துணை பதிவாளர் பாலசந்தர் தலைமையில் குழு அமைத்துள்ளனர். குழுவிற்கு இடையூறு ஏற்படுத்தலாம் என்ற நோக்கத்தில் பாம்கோ தலைவர் ஏ.வி., நாகராஜனை தலைவர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து இணை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்

இதனைத்தொடர்ந்து பாம்கோ தலைவர் அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டினர்.

கூட்டுறவுதுறை அமைச்சர் பெரியகருப்பனின் சொந்த மாவட்டத்தில் முதல் முறையாக தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.