அடித்து ஆடும் அதிமுக! அமைதி காக்கும் பாஜக - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil
Connect with us

Breaking News

அடித்து ஆடும் அதிமுக! அமைதி காக்கும் பாஜக

Published

on

DMK commits injustice after killing football player - Opposition leader demands Rs 1 crore!

அடித்து ஆடும் அதிமுக! அமைதி காக்கும் பாஜக

 

Advertisement

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல அதிமுக பாஜக இடையே சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை.

 

Advertisement

நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தல் தான், இரு கட்சிகளுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகளால் ஏற்பட காரணமாக அமைந்தது.

 

Advertisement

பாஜகவின் ஆதரவினை எதிர்பாராமல், தனது கட்சி சார்பில் வேட்பாளரை அறிவித்து களம் காண தயாரானார் எடப்பாடி பழனிச்சாமி.

 

Advertisement

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு நாள் கூட பாஜகவினரோடு சேர்ந்து பிரச்சாரம் செய்யாமல் பாஜகவை தவிர்த்தே வந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

 

Advertisement

நடந்து முடிந்த தேர்தலில் 67,000 வாக்குகள் வித்யாசத்தில், ஆளும் கட்சியான திமுகவிடம் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

 

Advertisement

இந்த தோல்வி குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை, ஒற்றை தலைமைக்கு எதிராக பல கருத்துக்களை பேசியிருப்பது அணைவரும் அறிந்த ஒன்றுதான்.

 

Advertisement

இந்த நிலையில் தான் பாஜக ஐடிவிங் தலைவர் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

Advertisement

அதிமுகவில் இணைந்த பின் நிர்மல்குமார், பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். நிர்மல்குமாரின் பேச்சுக்கள் பலவிதமான சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும், நிர்மல்குமாரை கண்டிக்காமல் அமைதி காத்து வந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

 

Advertisement

தமிழக பாஜக முக்கிய நிர்வாகியும், அண்ணாமலையின் வலது கரகமாகவும் செயல்படும் அமர்பிரசாத் ரெட்டி, அதிமுகவை பற்றி பல கடுமையான விமர்சனங்களை வைத்தார். இந்த விமர்சனங்கள் அதிமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

 

Advertisement

அமர்பிரசாத் ரெட்டியின் விமர்சனத்திற்கு பதிலடி தரும் வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார் மற்றும் செல்லூர்ராஜி ஆகியோர் தங்களது பங்கிற்கு விமர்சனங்களை பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அமர்பிரசாத் ரெட்டி மீது அள்ளி வீசினர்.

 

Advertisement

எது எப்படியோ ஈரோடு இடைத்தேர்தலில் 40,000 மைனாரிட்டி வாக்காளர்களின் வாக்குகள், அதிமுகவிற்கு கிடைக்காமல் போனதற்கு பாஜகவுடனான கூட்டணி தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளிப்படையாக அறிவித்தது பாஜக நிர்வாகிகள் மத்தியில் மேலும் பரபரப்பை உண்டாக்கியது.

 

Advertisement

இருபது ஓவர் கிரிக்கெட் மேட்ச் போல ஒவ்வொரு பாலுக்கும் அதிரடியாக அடித்து விளையாட ஆரம்பித்திருக்கிறது அதிமுக. இரு கட்சிகளும் போகின்ற போக்கை பார்த்தால் வரும் நாடளுமன்ற தேர்தல் வரை கூட்டணி உறவு நீடிக்குமா அல்லது அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்று கூறி விடைபெற்று செல்வார்களா என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையேயும், அரசியல் நோக்கர்களிடமும் நிலவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Exit mobile version