ரேஷன் கார்டு பயனாளர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட குஷியான அறிவிப்பு!

0
96

ஆய்வுப் பணிகளுக்காக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்றார். விழுப்புரம் மாவட்டம் கானை குப்பம் ஊராட்சியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் நகர் பெரும்பாக்கம் பகுதியிலுள்ள நியாய விலை கடையில் ஆய்வு செய்தார். அதேபோல விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறையின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார் என்று சொல்லப்படுகிறது.

இதன்பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி நியாயவிலை கடைகள் ஒரு துறையின் கீழ் கொண்டு வரப்படும் என தெரிவித்திருக்கிறார். மேலும் திமுக 505 வாக்குறுதிகளில் 208 வாக்குறுதிகள் 110 விதியின் கீழ் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

இதனை முதலமைச்சர் ஸ்டாலின் பட்டியலிட்டார் அதேபோல அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் தொடர்பாக புத்தகம் வெளியிடப்பட்டிருக்கின்றன என தெரிவித்திருக்கிறார்.

அதேபோல நியாயவிலை கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை ஒரு கிலோ உளுந்து உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறோம். அதில் எந்த மாற்றமுமில்லை இனி கண் கருவிழி மூலமாக அடையாளம் காணும் முறை மிக விரைவில் தமிழ்நாடு முழுவதும் கொண்டுவரப்படும்.

அறநிலையத்துறைக்கு சொந்தமான காலி இடத்தில் கூரை அமைக்கப்பட்டு அங்கே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறோம் என்று திட்டம் நிச்சயமாக செயல்படுத்தப்படும் அதில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது என தெரிவித்தார்.