ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த இடங்ககளில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!

0
171
Additional buses from these destinations from 1st January! The information published by the Transport Corporation!
Additional buses from these destinations from 1st January! The information published by the Transport Corporation!

ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த இடங்ககளில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!

கொரோனா தொற்று காரணமாக போக்குவரத்து சேவைகள் அதிகளவு பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மீண்டும் போக்குவரத்து சேவைகள் தொடங்கியது.மேலும் கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது அப்போது ஆம்னி பேருந்துக்களின் கட்டணம் மூன்று மடங்காக அதிகரித்தது.

கடந்த மாதம் தீபத்திருநாளையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.கடந்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல அனைத்து இடங்களுக்கும் சிறப்பு கட்டண பேருந்துகள் இயக்கப்பட்டது.இந்நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை மற்றும்ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் விடுமுறை முடிந்த பிறகு பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை வருவதற்கு வசதியாக இருக்கும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதனால் ஜனவரி ஒன்றாம் தேதி திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, கோவை, ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து தினசரி சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகளுடன் 600 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவை,ஈரோடு,புதுச்சேரி போன்ற முக்கிய நகரங்களுக்கு தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதல் தேவைக்கு ஏற்றாவாறு சிறப்பு பேருந்துகள் இயக்க அனைத்து போக்குவரத்து கழகங்களும் முடிவு செய்துள்ளது.அதனையடுத்து அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் போதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பொதுமக்களின் பயணங்களுக்கு உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த சிறப்பு பேருந்துகளை www.tnstc.in மற்றும் tnstc official app ஆகிய இணையதளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K