வாரிசு திரைப்படம் பார்க்க சென்ற நடிகை த்ரிஷா!! ரசிகர்களுடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்!

0
355
Actress Trisha went to watch Waris movie!! The video of talking to the fans went viral on the Internet!
Actress Trisha went to watch Waris movie!! The video of talking to the fans went viral on the Internet!

வாரிசு திரைப்படம் பார்க்க சென்ற நடிகை த்ரிஷா!! ரசிகர்களுடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்!

அதிகளவு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகரில் ஒருவர் விஜய்.இவர் தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.இவர் நடிப்பில் உருவாகிய திரைப்படம் தான் வாரிசு.இந்த படம் இன்று அதிகாலை தான் வெளியானது. அதனை தொடர்ந்து இந்த படத்தின் விமர்சனங்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த படம்  தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில்ராஜி தயாரிப்பில் விஜய் நடிப்பில் தாயாராகி உள்ளது.இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். அந்த வகையில் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா,பிரகாஷ்ராஜ் ,சரத்குமார்,ஜெயசுதா,யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.மேலும் இந்த படமானது அப்பா மகன் இடையே நிகழும் பிரச்சனை தான்.

அதனையடுத்து குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்து காட்டும் படமாக அமைந்துள்ளது.இந்த படமானது சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயார்செய்யபட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இந்த படம் முழுவதும் பேமிலி சென்டி மென்ட் படமாக உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்தினை காண பல பிரபலங்களும் தியேட்டருக்கு வந்துள்ளனர்.அதிலும் குறிப்பாக நடிகை த்ரிஷா வாரிசு படம் பார்க்க ஒரு பிரபல தியேட்டருக்கு அவருடைய தோழிகளுடன் வந்திருந்தார்.தியேட்டரில் கடைசி வரிசையில் அமர்ந்து படம் பார்த்து கொண்டிருந்த த்ரிஷாவை ரஞ்சிதமே பாடல் வரும் பொழுது ரசிகர்கள் அனைவரும்  பார்த்தனர்.அப்போது த்ரிஷா ரசிகர்களை பார்தனர் அப்போது அவர் சைகையில் ஸ்கிரீனை பாருங்க என கூறினார்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

author avatar
Parthipan K