சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே இல்லை… நடிகை தமன்னாவின் திடீர் குற்றச்சாட்டு!

0
150

சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே இல்லை… நடிகை தமன்னாவின் திடீர் குற்றச்சாட்டு!

நடிகை தமன்னா பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி கல்லூரி, சிறுத்தை, அயன், பையா, படிக்காதவன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். ஆனால் நடிப்புக்கு வாய்ப்புள்ள கதைக்களங்களை தேர்வு செய்து நடித்தவர் இல்லை.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் கூட பல்வேறு கோணத்தில் நடித்து உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி சும்மா கும்முனு மாறியுள்ளார். சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். அதிலும், 11th Hour என்னும் வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா.

இதையடுத்து இப்போது அவர் ரஜினிகாந்தோடு ஜெயிலர் படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக சொல்லபடுகிறது. இந்நிலையில் தமன்னா “சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே இல்லை. ஹீரோக்களின் சம்பளத்தில் பாதி கூட ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. அவர்களின் பேச்சை யாருமே கேட்பது இல்லை. ஹீரோயின்களின் புகைப்படம் கூட போஸ்டர்களில் இடம்பெறுவதில்லை.” எனக் கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.