7 ஜி ரெயின்போ காலனியில் சோனியாவிற்கு முன்பு இவர் தான் ஹீரோயினா?

0
61


வழக்கமாக ஹிட்டான ஹீரோ ஹீரோயின் அவர்களுக்கு டூயட் அதில் சில நகைச்சுவைகளை சேர்த்து கமர்ஷியல் படம் செய்தால் கண்டிப்பா அது ஹிட்டாகும் இன்னும் எண்ணத்தில் கடை மீது கவனம் செலுத்தாத இயக்குனர்களுக்கு இடையே மக்களிடம் புதிய ஹீரோ ஹீரோயின்களை வைத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அக் கதையை படமாக்கி வெற்றி பெறச் செய்யும் இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர்.

இவர் இயக்கிய படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அவ்வகையில் இவர் இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை சோனியா அகர்வால். பின்பு இவர்கள் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பின் பிரிந்தனர். செல்வராகவனும் பிறகு மறுமணம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் முதலில் ஹீரோயினாக சோனியா அகர்வாலுக்கு முன்பு வேறு ஒரு நடிகை நடிக்க இருந்தார் என்று சோனியா அகர்வால் கூறிய தகவல் வெளியாகியுள்ளது.

இதை அண்மையில் ஒரு பேட்டியில் 7ஜி ரெயின்போ காலனி உருவாகும் நேரத்தில் நான் கோவில் படப்பிடிப்பில் இருந்தேன். எனக்கு முன்னால் அந்த படத்தில் சுப்பிரமணியபுரம் ஸ்வாதி நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அதில் அவரால் நடிக்க முடியாமல் போகவே அப்படத்தில் அனிதா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது என்று கூறியுள்ளார்.

2004 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு படம் என்றும் கூறலாம். யுவன் சங்கர் ராஜா படத்தில் இசையமைத்த பாடல்களுக்கு இன்றும் ரசிகர்கள் உள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படம் செல்வராகவனுக்கு ஒரு கல்வெட்டு என்றும் கூறலாம்.

author avatar
Parthipan K

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here