நடிகை ராதிகா மறுபடியும் சின்னத்திரைக்கு வரப்போறாங்க!! அது என்ன சீரியல் தெரியுமா??

0
94
Actress Radhika to come to the iconic screen again !! Do you know what serial it is ??
Actress Radhika to come to the iconic screen again !! Do you know what serial it is ??

நடிகை ராதிகா மறுபடியும் சின்னத்திரைக்கு வரப்போறாங்க!! அது என்ன சீரியல் தெரியுமா??

இலங்கையில் கொழும்பு நகரில் 1963 இல் நடிகர் எம் ஆர் ராதாவுக்கும் அவரின் மூன்றாவது மனைவி கீதா விற்கும் பிறந்தவர் நடிகை ராதிகா. நடிகை நிரோஷா மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ராதா மோகன் ஆகியோர் இவருடன் உடன் பிறந்தவர்கள். நடிகரும் அரசியல்வாதியுமான ராதாரவி அவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார். மேலும் ராதிகா நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரை 2001ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவருக்கு ராகுல் என்ற மகன் உள்ளார்.

சரத்குமாரை திருமணம் புரிவதற்கும் முன்னர் ராதிகா இருமுறை திருமணம் புரிந்து விவாகரத்துப் பெற்றவர். முதல் முறை மலையாள நடிகரும் இயக்குனருமான பிரதாப் போதனையும், இரண்டாம் முறை இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்ட் ஹார்டி என்பவரையும் திருமணம் புரிந்தார். ஹார்டியுடன் இவருக்கு ராயன் ஹார்டி என்ற பெண் குழந்தை உண்டு. மேலும் இவர் தமிழ் திரைப்படங்களில் பல நடித்துள்ளார். அதில் சில படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த நிலையில் இவர் பல சீரியல்களிலும் நடித்து வந்தார். இவரின் நடிப்பிற்கு பல இல்லத்தரசிகள் ஆதரவு கொடுத்தனர்.

மேலும் தமிழில் சித்தி என்ற சின்னத்திரை நாடகம் மூலம் பிரபலம் அடைந்தார். மேலும் சித்தி நாடகத்தின் மூலம் பல ரசிகர்களை சேகரித்துக் கொண்டார். இதைதொடர்ந்து சன் தொலைக்காட்சியில் சில நாடகங்களில் நடித்து வந்தார். இதை தொடர்ந்து சில வருடத்திற்கு முன்பு இனி சீரியல்களில் நடிக்க போவதில்லை என்று கூறியிருந்தார். இதை அவர்களின் ரசிகர்கள் ஏற்க மறுத்தாலும் அவர் சில காரணங்களால் சீரியலில் நடிக்க வில்லை. இதைத் தொடர்ந்து ராதிகாவின் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் இருந்தனர். தற்பொழுது ராதிகாவின் ரசிகர்களுக்கு மகிழ்விக்கும் வகையில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் ராதிகா மீண்டும் சீரியலில் நடிக்க உள்ளார்களாம். மேலும் புதிய நாடகமாக இருக்க கூட வாய்ப்பு உள்ளது என்று சின்னத்திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது பற்றிய மேலும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை.

author avatar
CineDesk