நயன்தாரா ரூட்டில் ஹன்சிகா… திருமண வீடியோவை பிரபல ஓடிடியில் விற்பனை!

0
128

நயன்தாரா ரூட்டில் ஹன்சிகா… திருமண வீடியோவை பிரபல ஓடிடியில் விற்பனை!

ஹன்சிகா சோஹைல் கதூரியா என்பவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார்.

தமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ஹன்சிகா. இப்போது பெரியளவில் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மஹா திரைப்படமும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஹன்சிகா தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

நீண்ட நாள் குடும்ப நண்பரான சோஹைல் கதூரியா என்பவரை அவர், வரும் டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் திருமணம் செய்ய உள்ளார். சோஹைல் கதூரியா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். அவரின் முதல் திருமணத்தில் ஹன்சிகாவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை அவர் டிஸ்ணி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடிக்கு விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நயன்தாராவும் தன்னுடைய திருமண வீடியோவை நெட்பிளிக்ஸூக்கு விற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கி வந்தவர்தான் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயனத்தை ஆரம்பித்த இவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத்  இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான தேசமுருடு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.