கிராமிய பாடகி: நடிகை பரவை முனியம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார்!

0
108

கிராமிய பாடகி: நடிகை பரவை முனியம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார்!

சினிமா திரைப்படங்களில் பல்வேறு கிராமிய நாட்டுப்புற பாடல்கள் பாடியும் மற்றும் குணச்சித்திர நடிகையாக வலம்வந்த பரவை முனியம்மாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

தமிழ்திரைப்படங்களில் பல்வேறி குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் பரவை முனியம்மாள். “ஏ சிங்கம்போலே நடந்து வரான் செல்லப்பேராண்டி’ என்கிற இவர் பாடிய பாடல் மிகவும் பிரபலமானதாகும். இப்படம் நடிகர் விக்ரம் நடித்த தூள் படத்தில் இடம் பெற்ற பாடலாகும். இதை தவிர்த்து பல்வேறு கிராமிய நாட்டுப்புற பாடல்களையும் சிறப்பாக பாடியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படம் உட்பட 34 திரைப்படங்களில் நடித்துள்ளார். மிக எளிமையாகவும் கிராமத்து வாசனையை பாடல்களின் மூலமும் நடிப்பின் மூலமும் வெளிப்படுத்தி மக்களிடையே வரவேற்பை பெற்றவர். பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற பாடல்களைப் பாடி மக்களை ரசிக்க வைத்தவர்.

இவரது கலைச் சேவையை பாராட்டி தமிழக அரசு “கலைமாமணி” விருதை வழங்கி இவரை கெளரவித்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு சதுரடி 3500 என்ற திரைப்படமே இவர் நடித்த கடைசி திரைப்படமாகும். தமிழ் திரைப்படம் மட்டுமல்லாது மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சினிமா, கிராமிய நாட்டுப் புற பாடல் மட்டுமே இல்லாமல் தமிழரின் பாரம்பரிய உணவுகளை பற்றி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு ஆரோக்கியமான உணவுகள் குறித்த தகவலையும் தொலைக்காட்சிகளின் மூலமாக மக்களுக்கு கொண்டு சென்றவர். திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் பரவை முனியம்மாள் உயிரிழந்துள்ளார். சமீபத்தில் நடிகரும் இயக்குனருமான சேதுராமன் இறப்பும் சினிமா துறையினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து பரவை முனியம்மாள் அவர்களின் திடீர் இறப்பும் சினிமா மற்றும் பொதுமக்களிடையே அடுத்தடுத்த சோகத்தை உண்டாக்கியுள்ளது.

author avatar
Jayachandiran