தப்பித்து விடுவாரா ஹேமந்த்? காரணம் அரசியல் தலையீடு?

0
73

சின்னத்திரை நடிகை சித்ரா அவர்களை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் விசாரணைகள் நடந்து வருகின்றன.

இதுகுறித்து சித்ரா விவகாரத்தில் அமைச்சர்களின் மகன்கள் என்ற தலைப்பிலே செய்தித்தாள்களில் செய்திகள் உலா வரத் தொடங்கின அந்த செய்திகளில் சித்ராவின் கணவன் ஹேமந்த் பற்றியும் அவருடைய கடந்தகால விவரங்கள் தொடர்பாகவும் விரிவாக விளக்கப்பட்டு இருந்தது அந்த தகவலை வலுப்படுத்தும் விதமாக காவல்துறையினர் விசாரணையில் இருந்தவர்களை காப்பாற்றுவதற்காக ஒரு பெரிய குழுவே போராடிக் கொண்டே இருக்கின்றது என்று தெரிவிக்கிறார்கள் காவல்துறையினரின் வட்டாரத்தில்.

சித்ராவின் கணவர் அவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்களின் குழு ஒன்று நேரடியாக இந்த விசாரணையில் இறங்கி இருக்கின்றது. அதிகாரம் கொண்ட குடும்பத்தாரும் காவல்துறை அதிகாரிகளிடம் வழக்கின் தன்மையை பற்றி விசாரணை செய்து அவரை வாய்ப்புகள் இருந்தால் காப்பாற்றுங்கள் என்று காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்களாம்.

முன்பெல்லாம் ஹேமந்த் அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்று தெரிவித்தால் சுமார் 20 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் குழு காவல் நிலையத்தில் கூடி விடுவார்களாம். அதிலும் முடியாமல் போனால் அரசியல்வாதிகள் மூலம் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து தப்பித்து விடுவார் என்று தெரிவிக்கிறார்கள்.

ஆனால் இந்த வழக்கில் சித்ராவின் தாயின் மீது இந்த வழக்கை திசை திருப்ப முயற்சி செய்தார்கள் சித்ரா கணவருடைய ஆதரவாளர்கள். ஆனாலும் இந்த வழக்கை இணை ஆணையர் மகேஸ்வரி மற்றும் துணை ஆணையர் ஆய்வாளர் விஜயராகவன் உள்ளிட்டோர் குழு தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் சந்தர்ப்பம் காரணமாக அனைத்துமே ஹேமந்த் மீதான குற்றத்தை நிரூபிக்க ஏதுவான ஆதாரங்களை திரட்டுவதற்கு சந்தர்ப்பம் அமைந்து விட்டது. இதனை அறிந்து கொண்டு அரசியல் ரீதியாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

திருமணம் நடந்து 7 வருடங்களுக்குள் மனைவி தற்கொலை செய்து கொண்டால் 174(3)crpc அடிப்படையிலே காவல்துறை விசாரணை செய்வதற்கு முன்பாக ஆர்.டி.ஓ தான் முதலில் விசாரணை நடத்த வேண்டும் ஆர்.டி..ஓ விசாரணை முடிந்த பின்னரே காவல்துறை விசாரணை செய்ய வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டது இதன் அடிப்படையிலேயே காவல்துறையினரால் விசாரிக்கப்பட்ட ஹேமந்த் கடந்த 4 நாட்களுக்குப் பின்பு விடுதலை செய்யப்பட்டார்.

சித்ரா தற்கொலை செய்துகொண்ட பகுதியை உள்ளடக்கிய ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ இன்று முதல் விசாரணையை ஆரம்பிக்க இருக்கின்றார் அவர் சித்ரா மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணையை தொடங்க இருக்கின்றார். ஆர்.டி.ஓ விசாரணை என்பது ஒரு சில மாதங்கள் நீட்டிக்கப்படலாம், அவருடைய விசாரணை அறிக்கை தாக்கலான பின்னரே அதன் மீதாக காவல்துறை நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் ஆனாலும் அதற்குள்ளாக எல்லாம் தலைகீழாக மாறிவிடும் என்று தெரிவிக்கிறார்கள்.

ஆர்டிஓ திவ்யஸ்ரீ ஒரு பெண் என்ற காரணத்தால், சித்ரா என்ற பெண்ணிற்கு நீதி வாங்கி தருவார் என்ற எதிர்பார்ப்பு சித்திராவின் குடும்பத்தினரிடையே இருந்துவருகின்றது அதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.