Connect with us

Breaking News

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள மும்பைகார்!! இந்தியில் வெளியாகும் முதல் படம் ஓடிடியில் ரிலீஸ்!!

Published

on

Actor Vijay Sethupathi's Mumbaicar!! First Hindi movie released in OTD!!
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள மும்பைகார்!! இந்தியில் வெளியாகும் முதல் படம் ஓடிடியில் ரிலீஸ்!!
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள முதல் இந்தி படமான மும்பை கார் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள முதல் இந்தி படமான மும்பைகார் திரைப்படத்தை இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து சஞ்சய் மிஷ்ரா, தன்யா மணிகடலா, ராகவ் பினானி, விக்ராந் மாசே மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த மும்பைகார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜூன் 2ம் தேதி ஜியோ சினிமா ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த திரைப்படத்தை ஜியோ சினிமா செயலியில் இலவசமாக பார்க்கலாம் என்று தகவல் கிடைத்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நடித்த மும்பைகார் திரைப்படம் தமிழில் வெளியான மாநகரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும்.
தமிழில் 2017ம் ஆண்டில் வெளியான மாநகரம் திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த  திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீ, நடிகர் சந்தீப் கிஷன், நடிகை ரெஜினா கெசான்ட்ரா, நடிகர் ஷா ரா, முனிஷ் காந்த், சார்லி மற்றும் பலர் நடித்திருந்தனர். ஏற்கனவே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படத்தை நடிகர் அஜய் தேவ்கன் அவர்கள் இயக்கி அவரே நடித்து இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை பெற்ற நிலையில் மாநகரம் திரைப்படத்தின் இந்தி ரீமேக் மும்பைகார் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Continue Reading
Advertisement