தேசிய விருதை வாங்க மாட்டேன்-விஜய் சேதுபதி.! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!!

0
82

கடந்த 25-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற 67வது திரைப்படத்துறைக்ககான தேசிய விருதுகள் வழங்கப்பட்டது. அதில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்ட பலருக்கும் விருது வழங்கப்பட்டது.

மேலும், இந்திய சினிமா விருதுகளில் மிக உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு வழங்கப்பட்டது. இதுவரை தமிழ் திரைத்துறையில் இயக்குனர், கே‌.பாலச்சந்தர், நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த விருதை பெற்றுள்ளார்.

இதில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய்சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்திற்காக வழங்கப்பட்டது.

இதனை அடுத்து, நடிகர் விஜய் சேதுபதியை திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில் இவரின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2017ம் ஆண்டு திரைப் படக் குழுவினருடன் இவர் அளித்த பேட்டியில், மத்திய அரசின் திட்டங்களால் நாம் இன்றுவரை நசுக்கப்பட்டு வருகிறோம். இதனால், மத்திய அரசு தேசிய விருது கொடுத்தால் கூட அதனை தான் வாங்க மாட்டேன் என்று அதில் கூறி இருக்கிறார். ஆனால், தற்போது மத்திய அரசு கொடுத்த தேசிய விருதை பெருமையுடன் பெற்றுக்கொண்டுள்ளார். 2017 ஆம் ஆண்டிலும் பாஜக அரசு தானே ஆட்சியில் இருந்தது என்று சமூக வலைதளங்களில் நடிகர் விஜய் சேதுபதியை கலாய்த்து வருகின்றனர்.