விஷால் படத்தின் டீசரை வெளியிடும் நடிகர் விஜய்! காரணம் என்ன?

0
142
#image_title

விஷால் படத்தின் டீசரை வெளியிடும் நடிகர் விஜய்! காரணம் என்ன?

நடிகர் விஷால் அவர்களின் நடிப்பில் உருவாகி உள்ள மார்க் ஆண்டனி படத்தின் டீசரை இன்று மாலை நடிகர் விஜய் அவர்கள் வெளியிட உள்ளார்.

நடிகர் அர்ஜுன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நடிகர் விஷால், “செல்லமே” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

அதன்பிறகு சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, தீராத விளையாட்டுப் பிள்ளை போன்ற வெற்றிப் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார்.

தற்போது நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் நடிகர் விஷால் அவர்கள் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி அவர்களின் இரண்டாவது மகனாவார். நடிகர் விஷால் அவர்கள் சிறு வயதில் இருந்தே   நடிகர் விஜய் அவர்களின் தீவிர ரசிகர். அதன் காரணமாக நடிகர் விஜய் படத்தின் பெயர் “புலி” என்று வைத்ததால், நடிகர் விஷால் தன்னுடைய படத்திற்கு “பாயும் புலி” என்று பெயர் வைத்ததாக கூறப்படுகிறது.

இயக்குநர் மிஷ்கின் அவர்களுடன் தற்போது மோதலில் இருக்கும் நடிகர் விஷால் அவர்களுக்கு, நடிகர் விஜய் அவர்களுக்கும் இடையே சிறு மோதல் நிலவுவதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் விஷால் அவர்களின் நடிப்பில் உருவாகி உள்ள மார்க் ஆண்டனி படத்தின் டீசரை இன்று மாலை நடிகர் விஜய் அவர்கள் வெளியிட உள்ளார். இது சினிமா வட்டாரங்களில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Savitha