நடிகர் விஜய் நடிக்கும் லியோ! இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள படப்பிடிப்பு!!

0
115
#image_title
நடிகர் விஜய் நடிக்கும் லியோ! இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள படப்பிடிப்பு!
நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் லியோ திரைப்படம் பற்றி முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாரிசு படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். லியோ திரைப்படத்தில்  திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மேத்யு தாமஸ், சான்டி மாஸ்டர், அபிராமி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் லியோ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது.
இதையடுத்து லியோ திரைப்படம் பற்றி அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது லியோ படத்தை பற்றி முக்கியமான தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின்படி லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது சென்னையில் நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு பிறகு லியோ திரைப்படக்குழு இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்த பிறகு பாடல் காட்சிகளை படமாக்க படக்குழு வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.