காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க நடிகர் சூர்யா டுவிட்

0
75

காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க நடிகர் சூர்யா டுவிட்

நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சுற்றுச்சூழலை காக்க மௌனம் கலைப்போம் என்று ட்விட் செய்துள்ளார்.

கொரோனா தொற்றுக் காரணமாக சீனாவில் இருந்து வெளியேறும் பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளனர்.இந்த பன்னாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதற்காக இந்தியா EIA act-ல்பல தளர்வுகளை கொண்டு வந்துள்ளது.இந்தத் தளர்வுகளின் மூலம் கண்டிப்பாக இந்தியாவின் பொருளாதாரம் வளரும்.ஆனால் இது நம் இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை அமைப்புக்கு பெரிதும் சவாலாக இருக்க நேரிடும் எனவேதான் இந்த தளர்வுகளை கைவிடக்கோரி மக்கள் சார்பிலும் இதுபோன்ற சில நடிகர்கள் சார்பிலும் அவர்களின் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தி EIA குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் கூறியவாறு இப்போது உள்ள சட்டங்களே இயற்கை வளங்களை பாதுகாக்க போதுமானதாக இல்லை இதில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள EIA-2020 அமல்படுத்தப்பட்டால் இயற்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்.

காடுகளை அழித்தும் மரங்களை, வெட்டியும்,சாலை அமைப்பதும்,தொழிற்சாலை கட்டுவதும் வளர்ச்சி அல்ல மேலும் முக்கிய திட்டங்களை மக்கள் கருத்து கேட்பு மற்றும் பொது ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம்’ என்கிற ஒரு சரத்தே, அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

இந்த அறிக்கையை குறிப்பிட்டு நடிகர் சூர்யா ஒரு டுவிட் செய்துள்ளார்.அதில் அவர் கூறியவாறு பேசிய வார்த்தைகளை விட பேசாத “மௌனம் மிகவும் ஆபத்தானது, காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க” மௌனம் கலைப்போம் என்று அதில் அவர் கூறியுள்ளார்.

சூர்யா பதிவிட்டுள்ள டுவிட் https://bit.ly/3gd1ItG

author avatar
Pavithra